குழந்தைகளுக்கான திரைப்படத்தை விடுவோம். குழந்தைகளை மையப்படுத்தி தமிழில் திரைப்படங்கள் வந்து எத்தனை காலமாகிறது. இயக்குனர் அழகப்பன் சி-யிடம் கேட்டால் 30 வருடங்களுக்கு மேலாகிறது என்பார். இந்தக் குறையை சரி செய்ய அவரே இயக்கிய குழந்தைகளுக்கான படம் வண்ணத்துப்பூச்சி.
நகரத்தில் வளரும் குழந்தையான ஸ்ரீலட்சுமி, தனது பள்ளி விடுமுறையில் கிராமத்திலிருக்கும் தாத்தா பாலசிங்கத்தின் வீட்டிற்கு வருகிறார். நகரத்தில் நான்கு சுவருக்குள் இருந்த அவளது வாழ்க்கை, கிராமத்தில் வண்ணத்துப்பூச்சியாக சிறகு விரிக்கிறது.
நகரத்து கலாச்சாரம் குழந்தைகளின் உலகை சீரழிப்பதை, பெற்றோரின் பொறுப்பின்மை என பல்வேறு திசைகளில் படத்தை பயணிக்க விட்டுள்ளார் இயக்குனர்.
படம் குறித்து மேலும்...
அழகப்பன் சி. பதினைந்து ஆண்களுக்கும் மேலாக கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்தவர். ராசி அழகப்பன் என்ற பெயரில் கதை, கவிதை புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.
ரேவதி நீதிபதியாக சிறிய வேடம் ஏற்றுள்ளார்.
ரோஹன் இசை. மூவாயிரம் ஆண்டுகள் பாரம்பரியம் உள்ள 'துடுக்' இசைக் கருவியை படத்தில் பயன்படுத்தியுள்ளனர்.
பி.எஸ். தரன் ஒளிப்பதிவு. மதர் ஆர்ட்ஸ் இண்டர்நேஷனல்ஸ் படத்தை தயாரித்துள்ளது.