அலைகள் மூவிஸ் இண்டர் நேஷனல் தயாரிப்பு இளம்புயல். பெயரை வைத்தே படத்தின் பெரும்பகுதியை, அதன் குணாம்சத்தை கண்டு பிடிக்கலாம். இளம்புயலின் சுவாரஸியமான பகுதி அதன் தயாரிப்பு.
வெளிநாட்டிலிருந்து தமிழ்நாடு வந்து படம் பண்ணும் காலத்தில், வெளிநாட்டில்- அதாவது டென்மார்க்கில் தயாராகும் படம் இது. டென்மார்க் வாழ் தமிழர் வசந்த் ஹீரோ. ஏறக்குறைய இவர் டி.ஆர்.மாதிரி. தோற்றத்தில் அல்ல திறமையில்.
நடிப்புடன் இசை, கிராப்பிக்ஸ் என மேலும் இரு துறைகளை கையாண்டிருக்கிறார். டென்மார்க் தமிழச்சிகளுக்கு சினிமா பிடிக்காது போல. நம்மூர் பூர்ணிதாவும், சுஜிபாலாவும் தான் நாயகிகள். கி.செ.துரை படத்தை இயக்கியுள்ளார்.
படம் குறித்து மேலும் சில தவல்கள்.
* கருணாஸ் எதையும் அரைமணியில் மறந்து விடும் 'கஜினி' காமெடியில் கலக்கியுள்ளாராம்.
* காதலுக்கு வில்லன் நம்மூர் ஸ்ரீமன்.
* துருக்கியைச் சேர்ந்த உல்டூஸ் என்ற பெல்லி டான்சரை ஒரு பாடலுக்கு ஆட வைத்து புயலின் இளமையை அதிகப்படுத்தியிருக்கிறார்கள்.