பிரகாஷ் ராஜ் துரோணாச்சாரியார் மாதிரி. ஷாம் அர்ஜுனன் மாதிரி. இருவருக்கும் இடையிலான போட்டிகளும், சவால்களும்தான் சிவமயம். இயக்குனர் சஞ்சய்ராம் சொல்லும்போது சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.
உண்மை சம்பவங்களை மட்டுமே எடுப்பேன் என்று சபதம் செய்திருக்கும் சஞ்சய்ராம், புதுமுகங்களை தவர்த்து பிரபல முகங்களுடன் கைகோர்த்திருக்கும் முதல் படம்.
ஷாமிற்கு ஜோடி ஸ்ரீதேவிகா. இவருக்கு கிளாமர் கம்மி என்பதால் அதை ஈடுபட்ட மேகா நாயர். ரியாஸ்கான், 'காதல்' தண்டபாணி, ஓ.ஏ.கே. சுந்தர், சிட்டிபாபு, நெல்லை சிவா, சிசர் மனோகர், சாப்ளின் பாபு என குட்டி கோடம்பாக்கமே படத்தில் உண்டு.
படம் குறித்து மேலும் சில செய்திகள்...
ஷாம் மூன்று கெட்டப்புகளில் வருகிறார். அதிலொன்று அடர்த்தியான மீசை உள்ள கேரக்டர்.
ஸ்ரீதேவிகா பூவரசி என்ற கிராமத்துப் பெண் வேடத்தில் நடிக்கிறார்.
இசை தினா. வழக்கம் போல கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்துடன் பாடல்களையும் சஞ்சய்ராமே எழுதுகிறார்.