ELK புரொடக்சனின் புதிய தயாரிப்பு தெனாவட்டு. பெயரே ஒரு மாதிரியாக இருக்கே என்று கேட்டால், இந்த தெனாவட்டு திமிர், கொழுப்பு வகையைச் சேர்ந்தது இல்லை. நாயகன் ஒரு முடிவு எடுத்தால் அதிலிருந்து விலகமாட்டான். அதைத்தான் இந்த தெனாவாட்டு குறிக்கிறது என்கிறார் இயக்குனர் வி.வி. கதிர்.
கிராமத்திலிருந்து சென்னை வரும் கோட்டசாமி, சிட்டி ரவுடியிடம் சிக்கிக் கொள்வதுதான் கதையாம். கோட்டசாமியாக ஜீவாவும், அவரது காதலியாக பூனம் பஜ்வாவும் நடித்துள்ளனர். ஆக்சன் படம் என்பதை படத்தின் ஒரு கதையே சொல்லி விடுகிறது.
படத்தைப் பற்றி...
கற்றது தமிழுக்குப் பிறகு ஜீவா நடிக்கும் முழுமையான ஆக்சன் கமர்ஷியல்.
முதல் ஷெட்யூல்டிலேயே தீ விபத்திலிருநூது அதிர்ஷ்டவசமாக தப்பித்தார் ஜீவா.
படத்துக்கு இசை ஸ்ரீகாந்த் தேவா. அனைத்துப் பாடல்களும் நா. முத்துக்குமார்.
வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஜீவாவை தேடி அவரது கிராமத்திற்கு வில்லன்கள் வரும் காட்சியை பண்ருட்டியில் பிரமாண்டமாக எடுத்துள்ளனர்.
பண்ருட்டி தவிர கும்பகோணம், ராஜமுந்திரி, சென்னை, மதுரையிலும் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.