அசிஸ்டெண்ட் கமிஷனராக விஷால் நடித்திருக்கும் படம் சத்யம். நான்கு கோடி பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட சத்யம் இப்போது 12 கோடிகளை விழுங்கிவிட்டு பிரமாண்டமாக உருவாகி நிற்கிறது. தயாரிப்பு விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா. அவர்களின் குடும்ப நிறுவனமான G.K. ஃபிலிம்ஸ் படத்தை தயாரித்துள்ளது.
விஷாலுடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ளார், நயன்தாரா. தெய்வலட்சுமி என்ற டி.வி. நியூஸ் ரீடர் வேடம் இவருக்கு. படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. தெலுங்கில் சத்யத்தின் பெயர் சல்யூட்.
முதன் முறையாக கன்னட மொழி நடிகர் உபேந்திரா சத்யம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். தொடர் கொலைகள் செய்யும் உபேந்திராவை துரத்திப் பிடிக்கிறார் போலீஸான விஷால். கொலைக்கான பிளாஷ்பேக் ஒன்றும் படத்தில் உண்டு. சென்னை, ஹைதராபாத், ராஜமுந்திரி, துபாய் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளார் அறிமுக இயக்குனர் ராஜசேகர்.
படம் குறித்த பிற தகவல்கள்...
ஹாரிஸ் ஜெயராஜ் இரு மொழிகளுக்கும் இசையமைத்துள்ளார். பாடல்கள் பா.விஜய், யுகபாரதி.
கலை தோட்டா தரணி. 1.75 கோடியில் அரங்கு அமைத்து பாடல் காட்சி ஒன்றை எடுத்துள்ளனர்.
மம்மி, மேட்ரிக்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களுக்கு கிராபிக்ஸ் செய்த Craig Mumma சத்யத்தின் பிராபிக்ஸ் வேலைகளை கவனிக்கிறார்.
நீண்ட நாள்களுக்குப் பின் சுதா சந்திரன் நடித்துள்ளார்.
ஆர்.டி. ராஜசேகர் கேமரா, ஆண்டனி எடிட்டிங், வசனம் எஸ்.குணசேகரன்.