ஸ்ரீ மூவி மேக்கர்ஸ் சார்பில் ஜி. கிச்சா, எம். சாகுல் ஹமீது தயாரிக்கும் படம் தீ. இந்த தீக்கும் ரஜினி நடித்து வெளிவந்த தீக்கும் கதை ரீதியாக எந்த தொடர்பும் இல்லை.
என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக இதில் நடித்திருக்கிறார் சுந்தர் சி. என்கவுண்ட்டர் செய்யும் சுந்தர் சி-யை அரசியல்வாதிகள் பந்தா, காக்கியை துறந்து கதருக்கு மாறுகிறார். அவருக்கு அரசியலில் உதவி செய்பவராக நடித்துள்ளார் நமிதா. சுந்தர் சி-யின் மனைவியாக வருகிறார் ராகினி.
படம் குறித்த முக்கிய செய்திகள்...
படத்தை தயாரிக்கும் கிச்சாவே படத்தை இயக்கவும் செய்துள்ளார்.
ஸ்ரீகாந்த் தேவா இசை. பாடல்கள் யுகபாரதி.
டி. சங்கர் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டைப் பயிற்சி தளபதி தினேஷ்.
சுந்தர் சி எம்.எல்.ஏ. ஆவதற்கு உதவி செய்யும் வேடத்தில் மாளவிகா நடிப்பதாக இருந்தது. அவர் கர்ப்பமாக இருப்பதால் அந்த வேடத்தில் நமிதா நடிக்கிறார்.
அநீதியை தீயைப் போல் சுட்டெரிக்கும் வேடத்தில் சுந்தர் சி நடிப்பதால் படத்துக்கு தீ என்று பெயர் வைத்ததாக விளக்கமளித்தார் ஜி. கிச்சா.