விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்து பரபரப்பாகப் பேசப்பட்ட படம் ஆர்.கே. செல்வமணியின் புலன் விசாரணை. ஆட்டோ சங்கர் நடத்திய தொடர் கொலைகள், சிறுநீரகத் திருட்டு என உண்மைச் சம்பவங்களைக் கோர்த்து அன்று எடுத்தப் படத்தின் இரண்டாம் பாகம் இது.
விஜயகாந்தின் நீள கோட்டையும், வட்ட தொப்பியையும் புலன் விசாரணை-2க்காகப் போட்டிருப்பவர் பிரசாந்த். இதில் பிரசாந்துக்கு அசிஸ்டெண்ட் கமிஷனர் வேடமாம். அ.செ. இப்ராஹிம் ராவுத்தர் படத்தை தயாரித்துள்ளார்.
முதல் பாகத்தில் கதாநாயகனுக்கு ஜோடிகள் இல்லை. இரண்டாம் பாகத்தில் அதற்கும் சேர்த்து மூன்று நாயகிகள்.
படம் குறித்த மேலும் சில தகவல்கள்...
இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் இப்ராஹிம் ராவுத்தரே முதல் பாகத்தையும் தயாரித்தார்.
'நம்நாடு' கார்த்திகா, அஸ்வினி. அமீத்கான் என இரண்டாம் பாகத்தில் மூன்று நாயகிகள்.
இவர்களுடன் நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய் ஆகியோரும் நடித்துள்ளனர்.
முதல் பாகத்தில் ஆட்டோ சங்கரை நினைவுபடுத்தும் கதாபாத்திரத்தில் நடித்த ஆனந்தராஜ், இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார்.
சென்சார் தணிக்கைச் சான்றிதழ் தராததால் படம் மறு ஆய்வுக் குழுவின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது.