Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சந்தோஷ் சுப்ரமணியம்!

Advertiesment
சந்தோஷ் சுப்ரமணியம்!
, செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (16:24 IST)
AGS என்டர்டெய்ன்மெண்ட் கல்பார்த்தி எஸ். அகோரம் தயாரித்திருக்கும் படம் சந்தோஷ் சுப்ரமணியம். எம். ராஜா இயக்கியிருக்கும் நான்காவது ரீ-மேக் இது. நான்கிலும் அவரது தம்பி ஜெயம் ரவியே ஹீரோ என்பது இன்னொரு சாதனை.

webdunia photoWD
தெலுங்கில் டி. பாஸ்கர் இயக்கத்தில் சித்தார்த், ஜெனிலியா நடித்த பொம்மரிலு படத்தின் ரீ-மேக்கே சந்தோஷ் சுப்ரமணியம். தெலுங்கில் நடித்த அதே வேடத்தில் தமிழிலும் நடித்துள்ளார் ஜெனிலியா. இவர்களைத் தவிர பிரகாஷ்ராஜ், கீதா, கவுசல்யா, சந்தானம், பிரேம்ஜி அமரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படத்தைப் பற்றி...

திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் எம். ராஜா.

படத்துக்கு ஒளிப்பதிவு டி. கண்ணன்.

இசை தேவி ஸ்ரீபிரசாத். பாடல்களை நா. முத்துக்குமார், பா. விஜய் எழுதியுள்ளனர்.

கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் முதல் முறையாக இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

ஜெயம் ரவியின் வீட்டை ஏவி.எம்.-ல் பிரமாண்ட வீடு போன்ற அரங்கு அமைத்து எடுத்துள்ளனர்.

நடிகர் சித்தார்த் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil