Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகேஷ், சரண்யா மற்றும் பலர்!

Advertiesment
மகேஷ், சரண்யா மற்றும் பலர்!
, புதன், 2 ஏப்ரல் 2008 (18:30 IST)
கூல் புரொடக்சனின் புதிய தயாரிப்பு, மகேஷ் சரண்யா மற்றும் பலர். தொட்டால் பூ மலரும் படத்துக்குப் பிறகு இயக்குனர் பி. வாசுவின் மகன் சக்தி நடிக்கும் படம். அவருக்கு ஜோடி, சந்தியா.

webdunia photoWD
நமது சமூகத்தில் காதல் என்பது தகாத வார்த்தை. படங்களில் பரபரப்புக்குப் பயன்படும் ஒரு வில்லனாகவே காட்டப்படுகிறது. மாறாக இந்தப் படத்தில் காதலை அன்பின் அடையாளமாக காட்டியிருக்கிறோம் என்கிறார் இயக்குனர் பி.வி. ரவி.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தியாவுக்கு இளமை துள்ளலான வேடம். சக்தி, சந்தியாவுடன் கீர்த்தி சாவ்லா, வினோதினி, சந்தானம், மோகனப் பிரியா ஆகியோரும் நடிக்கின்றனர்.

படத்தைப் பற்றி...

காதல் என்றால் எதிர்ப்பு இருக்கும். இதில் எதிர்ப்பே இல்லாத காதலை காட்டியிருக்கிறார்கள்.

இயக்கத்துடன் கதை, திரைக்கதை, வசனத்தையும் பி.வி. ரவியே எழுதுகிறார்.

வித்யாசாகர் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். பாடல்கள் எழுதியிருப்பவர் பா. விஜய், நா. முத்துக்குமார், யுகபாரதி, நெல்லை ஜெயந்தா.

ஒளிப்பதிவு, கே. குணசேகரன், கூல் புரொடக்சன்ஸ் சார்பில் படத்தை சித. செண்பககுமார் தயாரித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil