OST ஃபிலிம்ஸ் இராம. சரவணன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் நேபாளி. முகவரி மூலம் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த வி.இஸட். துரை இயக்கம். பரத்தின் கேரியரில் இது முக்கியமான படம்.
நேபாளி, சாஃப்ட்வேர் என்ஜினியர், பிளேபாய் என மூன்று வித்தியாசமான வேடங்கள் பரத்துக்கு. இதில் ஒரு வேடத்துக்காக 13 கிலோ எடை அதிகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ப்ளேபாய் பரத்துக்கு ஜோடி மீரா ஜாஸ்மின். இன்னொரு பரத்துக்கு சங்கீதா ஜோடி.
படத்தைப் பற்றி முக்கிய தகவல்கள்...
நேபாளி வேடத்தில் நடிப்பதற்காக நிறைய ஹோம் வொர்க் செய்திருக்கிறார் பரத். நேபாளியின் தமிழ் உச்சரிப்பை அப்படியே கொண்டுவர, நேபாளி ஒருவரிடம் பயிற்சிஎடுத்திருக்கிறார் பரத்.
பரத், மீராஜாஸ்மின் முதலிரவுக் காட்சியை மிகவும் நெருக்கமாக படம் பிடித்துள்ளனர்.
படத்துக்கு இசை ஸ்ரீகாந்த் தேவா. கேமரா மதி.
இதுவரை எடுக்கப்பட்ட பரத் நடித்தப் படங்களிலேயே, அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம்.
ஸ்டண்ட் சிவா வித்தியாசமான முறையில் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்.
பட்டுக்கோட்டை பிரபாகர் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.
மூன்று விதமான கதைகள் நேபாளியில் சொல்லப்படுகின்றது. இதன் திரைக்கதை பேசப்படும் என்கிறார் இயக்கனர் வி.இஸட். துரை.