வினியோகஸ்தர்களாக இருப்பவர்களின் அதிகபட்சக் கனவு, ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்பதாகவே இருக்கும். கோயம்புத்தூர் வினியோகஸ்தர் பி.சங்கரின் கனவும் இதுவே. அவரது கனவை நனவாக்கும் படம் சிலந்தி. மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் முன்னா ஹீரோ. ஆனால் பப்ளிக் மனதில் இடம்பிடித்திருப்பது ஹீரோயினாக நடிக்கும் மோனிகாவின் புகைப்படங்கள்தான்.
இதுவரை இழுத்துப் போர்த்தி நடித்தவர், முதன் முறையாக கவர்ச்சி ஏரியாவில் கால் பதித்திருக்கிறார். இதில் இடம்பெறும் நீச்சல் காட்சியை நெஞ்சில் வியர்க்கும் அளவுக்கு படம் பிடித்திருக்கிறார்களாம்.
படத்தை இயக்கியிருப்பவர் ஆதி என்கிற ஆதிராஜன். இவர் ஒரு பத்திரிகையாளர். ஸ்டோரி டிஸ்கஷன், வசனம் என்று சினிமாவின் அவுட்டோர் ஏரியாவில் இருந்தவர், முதன்முறையாக சிலந்தியை இயக்கி கேப்டனாகியிருக்கிறார்.
சிலந்தி பற்றி சில முக்கிய தகவல்கள்...
* பெளசிமா பாத்திமா படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
* இதுவொரு காதல் த்ரில்லர். ஐந்து நிமிடங்களுக்கு ஒரு சஸ்பென்ஸ் வைத்து திரைக்கதையை அமைத்திருக்கிறார்களாம்.
* ஏ.ஆர்.ரஹ்மானிடம் கீ-போர்டு வாசித்துக் கொண்டிருந்த நீல் முகர்ஜி இசையமைத்திருக்கிறார்.
* 90 சதவீத படப்பிடிப்பை பாண்டிச்சேரியில் நடத்தியிக்கிறார்கள்.
* கிளைமாக்ஸ் காட்சிக்காக மோனிகாவை 12 மணி நேரம் நீச்சல் குளத்தில் நீந்த விட்டிருக்கிறார்கள்.
* மோனிகா, முன்னாவுடன் ரியாஸ்கான், நெல்லை சிவா, கணேஷ்பாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.
* எடிட்டர் சதீஷ் குரோசவா.