அரோவணா ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள தோழாவில் சென்னை-600 028ல் நடித்த தோழர்கள் நான்கு பேர்தான் ஹீரோ. நிதின் சத்யா, பிரேம்ஜி அமரன், அஜய் ராஜ் மற்றும் வசந்த் விஜய். இவர்களுடன் சாகித்யா, ஜெனிபர், லக்சனா, சவுமியா, வெ.ஆ.மூர்த்தி, டெல்லி குமார் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
வானமே எல்லை என்று வாழ்கிற 4 நண்பர்களின் வாழ்க்கை புரட்டிப் போடுகிறது ஒரு சம்பவம். அந்த அதிர்ச்சியை அவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதே படத்தின் கதை என்றார் இயக்குனர் என். சுந்தரேஸ்வரன்.
படத்தைக் குறித்த முக்கிய செய்திகள்...
என்.சுந்தரேஸ்வரன் பால சந்தரின் அசிஸ்டெண்ட். அதனால் அவர் கேட்டுக் கொண்டபடி சிறிய வேடத்தில் பாலசந்தர் நடித்துள்ளார்.
படத்தின் நாயகி ஜெனியர், கில்லியில் விஜய் தங்கையாக நடித்தவர். தற்கொலை செய்வது போன்ற காட்சியில் நாலாவது மாடியிலிருந்து 'டூப்' போடாமல் குதித்துள்ளார் இவர்.
வா தோழா வரலாறு படைப்போமே பாடலுக்கு சுஜா ஆடியிருக்கிறார்.
பிரேம்ஜி அமரன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
தாவணி கனவுகள் படத்தில் வரும், ஒரு நாயகன் உதயமாகிறான் பாடலை ரீ-மிக்ஸ் செய்துள்ளனர்.
பொள்ளாச்சி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காதல் பாடல் ஒன்றை படமாக்கியுள்ளனர்.