மதுரையில் சுப்ரமணியபுரம் என்றொரு பகுதி இருக்கிறது. அங்கு எண்பதுகளில் நடக்கும் காதல் கதைதான் சசிகுமாரின் சுப்ரமணியபுரம். படத்தின் கதை எண்பதுகளில் நடப்பதால் ஹீரோ ஜெய், அவரது நண்பராக வரும் சசிகுமார், கஞ்சா கருப்பு என எல்லோரும் ஸ்டெப் கட்டிங் தலையும், டி.ஆர். தாடியமாக ஆளே மாறியிருக்கிறார்கள். பட்டன் தெறிக்கும் இறுக்கமான சட்டை, பெல்பாட்டம் பேண்ட் என காஸ்ட்யூமும் கலக்கல் ரகம்.
இணை பிரியாத நண்பர்களுக்குள் ஒரு பெண் விரிசலை உண்டாக்குகிறார். அந்தப் பெண்ணாக ஸ்வேதா. செல்வராகவன் இயக்கிய தெலுங்குப் படத்தில் த்ரிஷா தங்கையாக நடித்தவர் இவர்.
படத்தைப் பற்றிய முக்கிய தகவல்கள்....
இயக்குனர் சசிகுமாரின் கம்பெனி புரொடக்சன் படத்தை தயாரிக்கிறது. நாயகன் ஜெய்யின் நண்பராகவும் சசிகுமார் நடித்துள்ளார்.
கஞ்சா கருப்பு வயதான கெட்டப்பிலும் வருகிறார். இதற்கான மேக்கப் சாதனங்களை மும்பையிலிருந்து தருவித்திருக்கிறார்கள்.
சின்னத்திரை பிரபலம் ஜேம்ஸ் வசந்தன் படத்துக்கு இசை. சினிமாவில் இசையமைப்பது இவருக்கு இது முதல் அனுபவம்.
திருவிழா காட்சி ஒன்றுக்காக 300 துணை நடிகர்களுக்கு எண்பதுகளில் இருப்பது போன்ற காஸ்ட்யூம்கள் வாங்கி, அதை அணிவித்து படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்.
படத்துக்கு 'கற்றது தமிழ்' கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்கம் ரம்போன்.