தீ நகர் படத்துக்குப் பிறகு கரண் நடிக்கும் படம் காத்தவராயன். சலங்கை துரை கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குகிறார். இரண்டு மூன்று பேர் சேர்ந்து படம் தயாரிப்பது அதிகரித்து வருகிறது. காத்தவராயனையும் வி. ராமச்சந்திரன், ஆர். சாதிக், எஸ். திவான் ஆகியோர் இணைந்து சில்வர் ஜூப்ளி நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்கள். சில்வர் ஜூப்ளிக்கு இது முதல் படம்.
கதாநாயகி விதிஷாவுக்கும் இது முதல் படம். மாணவியான இவர் கிராம சேவைக்காக கரண் இருக்கும் ஊருக்கு வருகிறார். அங்கு கரண் கள்ளச்சாராயம் காய்ச்சுவதைப் பார்த்து, போலீசில் கரணை மாட்டி விடுகிறார். பிறகு கரண் ஏன் கள்ளச் சாராயம் காய்ச்சுகிறார் என்ற காரணம் விதிஷாவுக்கு தெரிய வருகிறது. இந்த ஏன்தான் படத்தின் மையகரு.
கருப்பசாமி குத்தகைதாரரில் வயிற்றை பதம் பார்த்த வடிவேலு, இதில் கந்துவட்டி ஆசாமியாக வருகிறார். ராதா, இளவரசு, காதல் தண்டபாணி, டி.பி.கஜேந்திரன், அலெக்ஸ், ரவி ஆகியோரும் படத்தில் உண்டு.
படத்தைப் பற்றி...
ஸ்ரீகாந்த் தேவா படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.
பாடல் காட்சியொன்றில் விதிஷாவை வெள்ளை உடையில் அருவியில் நனையவிட்டு படமாக்கியிருக்கிறார்கள்.
யோகிதா என்ற மும்பை அழகியை வைத்து ஒரு பாடல் காட்சியை எடுத்திருக்கிறார்கள்.
கரண் வடிவேலுவிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கி, அதை திருப்பி கொடுக்க முடியாமல் வடிவேலுவிடம் சிக்கித் திணறும் காட்சி சிறப்பாக வந்திருப்பதாக கூறினார் இயக்குனர் சலங்கை துரை.