சத்யா மூவிஸ் - சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ஜெயம் கொண்டான். மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்த ஆர். கண்ணன் இயக்குகிறார். இது அவருக்கு முதல் படம்.
உலகத்தில் உயர்வான நீர், காற்று, வானம், தாயன்பு எல்லாமே எளிமையானது. அதேபோல் ஜெயம் கொண்டான் கதையும் எளிமையானது. அதேநேரம் இதயம் தொடும் அளவிற்கு உயர்வானது என்றார் கண்ணன். வினய், லேகா, பாவனா இவர்கள் மூன்று பேர் பாதைகளில் வரும் இடர்கள், தடைகள்தான் படத்தின் கதை.
படத்தின் முக்கிய அம்சங்கள்...
வினய் படித்து முடித்து முன்னேறத் துடிக்கும் இளைஞனாக நடித்திருக்கிறார்.
பாவனா கல்லூரி மாணவி. பாஸ்கட் பால் பிளேயர். மதுரையில் மிளகாய் மண்டி வைத்திருப்பவரின் மகளாக நடித்துள்ளார்.
லேகா கலகலப்பான கல்லூரி மாணவி.
பொல்லாதவன் படத்தில் நடித்த கிஷோர் இதில் வில்லனாக வருகிறார்.
ஒய்.எம்.சி. ஹனீ·பா குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். இவர்கள் தவிர நிழல்கள் ரவி, நாசர், விவேக், சந்தானம் ஆகியோரும் படத்தில் உள்ளனர்.
பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் முதல் ஷெட்யூல்டை மதுரையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையிலும் நடத்தியுள்ளனர்.
இசை வித்யாசாகர். பாடல் காட்சிக்காக நார்வே, டென்மார்க் செல்லவுள்ளனர்.
தமிழ்ப் புத்தாண்டுக்கு படம் வெளிவருகிறது.