எஸ். பாஸ்கரின் ஆஸ்கார் மூவிஸ் வழங்க, ஸ்ரீநிதி சர்க்யூட்ஸ் பி. மாரியப்பா பாபு தயாரித்திருக்கும் படம் தோட்டா. கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்கியிருக்கிறார் செல்வா. இயக்குனர் செல்வாவுக்கு தோட்டா பதினெட்டாவது படம்.
ஒரு ரவுடியின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே கதை. ரவுடியாக ஜீவன் நடித்திருக்கிறார். ஆட்டோ டிரைவரின் மகளாக ப்ரியாமணி, இவர்களுடன் விஷ்ணுப்ரியன், சரண்ராஜ், சம்பத், வாகை சந்திரசேகர், லிவிங்ஸ்டன், சந்தானபாரதி, ராஜ்கபூர், மயில்சாமி, சபீதா ஆமுனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.
தோட்டாவுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். பாடல்கள் எழுதியிருப்பவர்கள் பழனிபாரதி, பா. விஜய், கபிலன்.
சண்டைப் பயிற்சி தளபதி தினேஷ். கலை இயக்கம் சாமிரெட்டி ரமேஷ்.
மலைக்கோட்டையில் தொடங்கிய கிளாமரை இந்தப் படத்திலும் தொடர்கிறார் ப்ரியாமணி. இவர் அருவியில் குளிக்கும் பாடல் காட்சி ஒன்று கேரளாவின் சாலக்குடியில் படமாக்கப்பட்டுள்ளது.
வா வா மாப்பிள்ளை... நீதாண்டா புது மாப்பிள்ளை என்ற பாடலுக்கு நடன இயக்குனர் ஸ்ரீதரும், நடிகை நீபாவும் ஆடியுள்ளனர்.
சென்சார் தோட்டாவுக்கு குழந்தைகள் பெற்றோர் துணையுடன் மட்டுமே பார்க்கத்தகுந்த U/A சான்றிதழ் அளித்துள்ளது.