'
தொட்டால் சிணுங்கி', 'சொர்ணமுகி', 'பிரியசகி' படங்களை இயக்கிய கே.எஸ். அதியமானின் புதிய படம் 'தூண்டில்'. ஷாம், சந்தியா, திவ்யா, ரேவதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.தனது முந்தையப் படங்களில் தனியாக காமெடி ட்ராக் வைத்துக் கொள்ளாதவர் கே.எஸ். அதியமான். முதல் முறையாக 'தூண்டிலில்' தனி காமெடி ட்ராக்கில் நடித்துள்ளார் விவேக். ''அதற்கான பலனை இப்போதே தெரிந்து கொள்ள முடிகிறது'' என விவேக்கை சிலாகிக்கிறார் இயக்குனர்.குட்வின் மூவிஸ் சார்பில் லண்டனைச் சேர்ந்த மூன்று பேர் கூட்டாக படத்தை தயாரித்துள்ளனர்.
முழுக்க லண்டனில் நடக்கும் கதை இது. ஷாம், சந்தியா கணவன்-மனைவியாக வருகின்றனர். இவர்கள் நடுவில் நுழைகிறார் திவ்யா. அதன்பிறகு நடக்கும் சம்பவங்கள்தான் கதை. முதல் முறையாக ஒரு குழந்தைக்கு தாயார இதில் நடித்துள்ளார் சந்தியா. அவருக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவராக ரேவதி.
கவியரசு படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அபிஷேக் ரே என்ற இசையமைப்பாளர் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். எடிட்டர் வித்யா சங்கர். கலை இயக்கம் ஜனா.
'தூண்டில்' தனக்கு திருப்பு முனையாக இருக்கும் என்று கூறியுள்ளார் ஷாம். சிறிய சண்டைக்காட்சி தவிர்த்து இந்தப் படத்தில் வேறு ஆக்ஷன் காட்சிகள் இல்லை.
வழக்கம்போல உறவின் சிக்கலை பேசும் மென்மையான கதை இது என கூறுகிறார் இயக்குனர் கே.எஸ்.அதியமான்.