ஏர் மீடியா டெக்னாலஜி நிறுவனம் முதன்முறையாக தயாரிக்கும் படம் "சற்று முன் கிடைத்த தகவல்".உறைய வைக்கும் த்ரில்லர் படத்தை நகைச்சுவை கலந்து இயக்கியிருக்கிறார் தக்காளி சி. சீனிவாசன். இப்படத்தில் முன்ணணி நட்சத்திரங்களின் படங்களுக்கு ஸ்டண்ட் டைரக்டராக பணியாற்றிய கனல் கண்ணன் கதையின் நாயகனாக நகைச்சுவை கலந்த சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 'அம்முவாகிய நான்' பாரதி கதாநாயகியாகவும் மற்றும் ஸ்ரீமன், கெளசல்யா, சேது இவர்கள் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளனர். கருணாஸ், கிரேன் மனோகர் ஜோடி நகைச்சுவையில் கலக்கியிருக்கிறார்கள். கனல் கண்ணன் ஒரு மன நல காப்பகத்திலிருந்து தப்பி, பாரதி தனியாக இருக்கும் வீட்டிற்குள் நுழைந்துவிடுகிறார். ஒரு பைத்தியத்திடம் மாட்டிக் கொண்ட பாரதி, அவன் தன்னைக் கொன்று விடுவானோ என்ற அச்சத்தில் நடுங்குகிறாள். அந்த சமயம் சேது, போலீஸ் உடையில் வந்து அவளைக் காப்பாற்றுவதாகக் கூறுகிறார்.ஆனால் சேதுவின் நடவடிக்கையிலும் உடையிலும் உள்ள மாறுபாடுகளை அறிந்த கனல் கண்ணன், சேதுவை வீட்டை விட்டு வெளியேறுமாறு பாரதியிடம் கூறுகிறார். ஆனால் சேது அவனை சிறைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறுகிறான். இவர்கள் இருவரிடமும் மாட்டிக் கொண்ட பாரதி, யாரை நம்புவது எனத் தெரியாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள போராடுகிறாள். பாரதி யார்? ஏன் அந்த வீட்டில் தனியாக இருக்கிறாள். அவள் வீட்டில் உள்ளவர்கள் வந்து அவளை அந்த இருவரிடமிருந்தும் காப்பாற்றுவார்களா?ஏன் கனல் கண்ணன் பாரதியை கொல்ல வருகிறார்... சேது யார்? உண்மையில் அவர் ஒரு போலீஸ் அதிகாரியா? பாரதியை மன நோயாளி கனல் கண்ணனிடம் இருந்து காப்பாற்றுவானா? ஏன் எதற்கு சேது அந்த வீட்டிற்குள் வந்தான்? இதெற்கெல்லாம் விடை தெரிய வேண்டுமா?
சிரிக்க வைக்கும் ரத்தத்தை உறைய வைக்கும் நிகழ்ச்சித் தொகுப்புகளுடன் "சற்று முன் கிடைத்த தகவல்"௦ என்ற நகைச்சுவை த்ரில்லர் படத்தை திரையில் பாருங்கள்.
பிப்ரவரியில் இப்படம் வெளிவர இருக்கிறது.
தொழில்நுட்பக் கலைஞர்கள்:
இயக்குனர் - தக்காளி சி. சீனிவாசன்
இசை - பாலா
ஒளிப்பதிவு - செல்வா.ஆர்
எடிட்டிங் - கே. தணிகாசலம்
ஸ்டண்ட் - கனல் கண்ணன்
கலை இயக்குனர் - வெங்கல் ரவி
நடனம் - தாரா, பாலகுமாரன் - ரேவதி
பாடல்கள் - யுகபாரதி, கிருதியா, பாலா
வசனம் - சேகர் பாரதி
தயாரிப்பு - ஏர்மீடியா