ஐந்து கதாநாயகிகள் நடிக்கும் ராமன் தேடிய சீதை
, புதன், 9 ஜனவரி 2008 (17:17 IST)
முற்றிலும் புது முங்கள் நடிக்க ஒளிப்பதிவாளர்
ஜீவன் இயக்கும் மயிலு ஆகிய திரைப்படங்கள் தயாரிக்கும் மோசர் பேர் நிறுவனம் புளு ஓசன் என்டெர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ராமன் தேடிய சீதை என்ற புதிய படத்தை மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.இப்படத்தில் சேரன் கதை நாயகனாக நடிக்கிறார் பசுபதி மிக முக்கிய கதாபாத்திரத்திலும், நிதின் சத்யா ஜனரஞ்சக கதாபாத்திரத்திலும் மணிவண்ணன் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடிக்கவிருக்கின்றனர்.விமலாராமன், ரம்யா நம்பீசன், தூத்துக்குடி புகழ் கார்த்திகா மற்றும் ஒரு புதுமுகம் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் ஜெகன்நாத்.இசை வித்யாசாகர், ஒளிப்பதிவு ராஜேஸ்யாதவ், கோலா பாஸ்கர் எடிட்டிங் செய்ய, வைரபாலன் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். பாடல்களை யுகபாரதி, நா. முத்துக்குமார், கபிலன், நெல்லை ஜெயந்தா ஆகியோர் எழுதுகின்றனர்.ராமன் தேடிய சீதை பற்றி சில வரிகள்1.
மனிதனின் அகத் தோற்றத்தை பார்த்து நேசிக்க வேண்டும் என்ற கருவை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு எதார்த்தமான கதை.
2. பல நடுத்தர வர்க்கத்து இளைஞர்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.
3. இந்த கதைக்கு ஐந்து கதாநாயகிகள் தேவைப்படுகிறார்கள்.
4. படத்தின் பெரும்பகுதி நாகர்கோவில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட உள்ளது.
5. படத்தில் வரும் ஒரு வீட்டிற்காக நாகர்கோவிலில் ஒரு வீட்டை பல லட்சம் மதிப்பில் புதுப்பித்து வருகின்றனர்.
6. ஒரு பாடலுக்காக சுமார் 100 கண் பார்வையற்றவர்களை சந்தித்து, அவர்களின் வாழ்க்கை முறை,உணர்வுகளை ஆராய்ந்துள்ளார் கவிஞர் யுகபாரதி.
7. தரம் ஒன்றையே குறிக்கோளாக வைத்து பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது.