பாரதிராஜா நீண்ட இடைவெளிக்கு அப்புறம் இயக்கும் படம் பொம்மலாட்டம்.
நானா படேகர்-அர்ஜுன் இணைந்து நடிக்கும் இந்தப் படம் சினிமா இயக்குனர் வாழ்க்கையோடு தொடர்புடைய கதையாக எடுத்திருக்கிறார் இயக்குனர் இமயம் பாரதிராஜா.
நானா படேகர் - பாரதிராஜா கூட்டணி என்பதால் இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
ஜனவரி இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் படத்தை ரிலீஸ் பண்ணுகிற ஐடியாவில் இருக்கிறார்கள்.
இந்தியில் சினிமா, தெலுங்கில் காளிதாஸ் தமிழுக்கு பொம்மலாட்டம் என்று ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் வெளியிடப்போகிறார்கள்.