தென்றலாக வருட வரும் கண்களும் கவிபாடுதே!
, வியாழன், 27 டிசம்பர் 2007 (11:16 IST)
கட்டுமானத் தொழிலில் புகழ்பெற்று விளங்கும், கே.ஜி. ரங்கமணி, ஆர். நந்தகுமார், பி. ரமேஷ் இணைந்து ஐடிசி புரடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் படம் - கண்களும் கவிபாடுதே. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கே. சந்தர்நாத் டி.எ·ப்.டி.! பி. வாசுவிடம் முப்பது படங்களுக்கு மேல் இணை இயக்குநராகப் பணியாற்றிய இவர், இதயவாசல், ஆரத்தி எடுங்கடி, வீரபாண்டிக் கோட்டையில் போன்ற படங்களையும், கன்னடத்தில் பிரபல ஹீரோ தர்ஷன் நடித்த தர்மா என்ற படத்தையும் இயக்கியவர். இவர் இயக்கும் ஒன்பதாவது படம் இது.கண்களும் கவிபாடுதே படத்தில் ரஜித், ஆகாஷ், ரத்தன் என மூன்று புதுமுகங்கள், கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள். இவர்களில் ரஜித், பிரபல மலையாளப் பட இயக்குநர் கமல் இயக்கத்தில் கோல்மால் என்ற மலையாளப் படத்தில் நடித்தவர். மற்றொரு நாயகனான ஆகாஷ் பிரபல மாடல் சென்னை 2007 என்ற ஆணழகன் போட்டியில் பெஸ்ட் ·பேஸ் என தேர்வு செய்யப்பட்டவர். ரத்தன் - பதினைந்து படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.இவர்களுக்கு ஜோடியாக மிருதுளா, லிகிதா, லக்ஷனா என மூன்று கதாநாயகிகள் இப்படத்தில் அறிமுகமாகிறார்கள். ரஜித்துக்கு ஜோடியாக மிருதுளாவும், ஆகாஷ் ஜோடியாக லிகிதாவும், ரத்தன் ஜோடியாக லக்ஷனாவும் நடிக்கிறார்கள்.
இப்படத்தில் அறிமுகமாகும் இந்த ஆறு பேருமே தங்களுக்கு மிகச்சிறப்பான எதிர்காலம் அமையும் வகையில் பிரம்மாதமாக நடித்திருக்கிறார்கள்.கண்களும் கவிபாடுதே படத்தின் கதை என்ன? இது புயல் இல்லை தென்றல். காதலும் சென்டிமென்டும் கலந்த வித்தியாசமான கதை. தற்போது வரும் படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமான கதை இது. இளைஞர்களைக் கவரும் காட்சியமைப்புகளைக் கொண்டு எல்லா வயதினரையும் கவரும் வகையில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். குடும்பப் பாங்கான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் பெண்களுக்கும் பிடித்தமான படமாக இது இருக்கும்" என்ற முன்னுரையோடு படத்தின் கதையைக் கோடிட்டுக் காட்டுகிறார் இயக்குநர் கே. சந்தர்நாத்.சென்னையில் ஒரு ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டிருக்கும் மூன்று இளைஞர்கள் தங்களின் நண்பனின் தங்கை திருமணத்துக்காக கிராமத்துக்கு செல்கிறார்கள். அங்கே மூன்று பெண்களை சந்திக்கிறார்கள். பாசத்துக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு அந்தப் பெண்கள் மீது காதல் வருகிறது. அதனால் ஏற்படும் பிரச்சினைதான் கதை.இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி போன்று எந்தப் படத்திலும் வந்ததில்லை என்கிற இயக்குநர், முதலில் எனக்குள் தோன்றியதே இந்தக் க்ளைமாக்ஸ் காட்சிதான். அதன்பிறகுதான் கதையையே யோசித்தேன் என்றும் சொல்கிறார்.இந்த படத்தின் ஹீரோ என்று கேட்டால் இளையராஜா என்று சொல்வார்களாம், அந்த அளவிற்கு படத்தில் ஐந்து பாடல்களையும் உருவாக்கி இருக்கிறார். தற்போது கண்களும் கவிபாடுதே படத்தில் இளையராஜா இசையில் விஷாலி மனோகரன் பாடலாசிரியராக அறிமுகமாகிறார்.
காரைக்காலைச் சுற்றியுள்ள இந்தப் பகுதிகள் அனைத்தும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகள். பல கிராமங்களில் முக்கிய பகுதிகள் அழிந்துவிட்ட நிலையில் அந்த வரலாற்று சோகத்தை தன் படத்தில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். ஒளிப்பதிவாளர் செல்வகுமாரின் ஒளிப்பதிவு கண்களும கவிபாடுதே படத்துக்கு பலம் பொருந்திய அம்சமாக அமைந்திருக்கிறது. இவர் மலையாளத்தில் பிரபல ஒளிப்பதிவாளான அழகப்பனின் உதவியாளர்.
இசை - இளையராஜா
ஒளிப்பதிவு - செல்வகுமார்
பாடல்கள் - முத்துலிங்கம், மு. மேத்தா, பழனிபாரதி. பா. விஜய். விஷாலி,
படத் தொகுப்பு - சுரேஷ் அர்ஸ்
கலை- பாலு - சைமன்
சண்டைப் பயிற்சி - இந்தியன் பாஸ்கர்
நடனம் - சிவசங்கர், கூல்ஜெயந்த், காதல் கந்தாஸ்
தயாரிப்பு - கே.ஜி. ரங்கமணி, ஆர். நந்தகுமார், பி, ரமே்ஷ
தயாரிப்பு மேற்பார்வை - எம். ஜெயக்குமார்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - கே. சந்தர்நாத்