தொழிலதிபரான ஆண்டனி ஈ.எல்.கே. புரடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரித்த புலி வருது என்ற படத்தைத் தொடர்ந்து ஜீவா நடிக்கும் தெனாவட்டு என்ற படத்தை மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார் ஆண்டனி. இந்தப் படத்தில் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.கிராமத்தைச் சேர்ந்த கோட்டைச்சாமி பிழைப்பு தேடி சென்னைக்கு வருகிறான். சென்னையில் மிகப்பெரிய தாதாவாக விளங்கும் கைலாசம் ஒருவனை கொலை செய்கிறான். அவன் செய்த கொலையை தற்செயலாக அங்கே வரும் கோட்டைச்சாமி நேரில் பார்த்து விடுகிறான். அதோடு, இந்த ஊரே வேண்டாம் என்று சொந்த ஊருக்குப் போய்விடுகிறான். தான் கொலை செய்ததை கோட்டைச்சாமி பார்த்துவிட்டான் என்பது கைலாசத்துக்குத் தெரிய வருகிறது.ஊருக்குப் போன கோட்டைச்சாமியைத் தேடி சுமார் இருபத்தைந்து சுமோக்களில் கைலாசத்தின் ட்கள் விரைகிறார்கள். அங்கிருக்கும் கோட்டைச்சாமியை சீண்டிப்பார்க்க, பொங்கி எழும் கோட்டைச்சாமி தனி ஆளாக அனைவரையும் அடித்து விரட்டுகிறான்.
இப்படி ஒரு காட்சி பண்ருட்டி அருகில் உள்ள கிராமத்தில் படமாக்கப்பட்டது. இக்காட்சிக்காக 150 குடிசைகள் அமைக்கப்பட்டது. இந்தக் காட்சியில் 35 ஃபைட்டர்ஸ், 500 துணை நடிகர்கள் பங்கு பெற்றனர். சுமார் ஐம்பது லட்சம் செலவில் பதினைந்து நாட்கள் மிகப்பிரம்மாண்டமாக படமானது.
பண்ருட்டி தவிர சென்னை, மதுரை, கும்பகோணம், அரக்குவேலி, ராஜமுந்திரி போன்ற ஊர்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இசை - வெற்றி
ஒளிப்பதிவு - ஸ்ரீகாந்த் தேவா
பாடல்கள் - நா. முத்துகுமார்
படத் தொகுப்பு - ராஜா முகம்மது
கலை- ரூபேஷ்
சண்டைப் பயிற்சி - அனல் அரசு
நடனம் - சிவசங்கர், கல்யாண், தினேஷ்
தயாரிப்பு நிர்வாகம் - மாரியப்பன்
தயாரிப்பு மேற்பார்வை - எம்.எம்.எஸ். மூர்த்தி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - வி.வி. கதிர்
தயாரிப்பு - ஆண்டனி