நவ்யா நாயருக்கு காதல் மாத்திரை கொடுத்த ஸ்ரீகாந்த்
, திங்கள், 17 டிசம்பர் 2007 (12:38 IST)
நந்து வித்யாசமானவன். மற்றவர்களின் பலவீனங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அதில் லாபம் பார்க்கும் வித்தியாசமான வியாபாரி. அப்படிப்பட்ட எட்டப்பனின் கண்களில் பட்டு மின்னலாக மறைகிறாள் காயத்ரி. அவளை சந்தித்து பழகுகிறான். இதை சாப்பிடால் தெம்பு வரும் என்று பொய் சொல்லி ஒரு மாத்திரையை கொடுத்து சாப்பிட வைக்கிறான். அது காதல் மாத்திரை. அந்த மாத்திரையை சாப்பிட்டால் அதைக் கொடுத்தவர் மீது காதல் வரும் என்பதை அறியாமல் காயத்ரி நந்து மீது காதல் ஏற்பட்டு அவனுடன் ஊட்டியில் சுற்றித் திரிகிறாள்.கோடி கோடி மின்னல்கள் கூடி வந்த பெண்மை இது - என்று அங்கு இருவரும் ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள்.
ஸ்ரீகாந்தும், நவ்யா நாயரும் இடம்பெறும் இந்த பாடல் காட்சி ட்ரான்ஸ் இந்தியா என்ற பட நிறுவனம் சார்பில் திருமலை மிகப்பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் எட்டப்பன் படத்திற்காக காட்சியாக்கப்பட்டது. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஆர்.கே. வித்யாதரன். சரத்குமார் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் வைத்தீஸ்வரன் படத்தை இயக்கிய இவர் இயக்கும் இரண்டாவது தமிழ்ப்படம் இது. எட்டப்பன் படத்தில் ஸ்ரீகாந்த், நவ்யா நாயர் உடன் அரவிந்த் ஆகாஷ், போஸ் வெங்கட், சத்யன், மயில்சாமி, காதல் தண்டபாணி, பாபூஸ், சத்யஜித், கஜினி ராஜேஷ், நிலிமா ராணி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.சமூகத்தில் பெரிய மனிதர்களாக நடமாடும் பெரும்புள்ளிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் எட்டப்பன் என்ற வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார் ஸ்ரீகாந்த்.
இசை - விஜய் ஆன்டணி
படத் தொகுப்பு - கோடீஸ்வரன்
ஒளிப்பதிவு - எம்.வி. பன்னீர் செல்வம்
கலை - சகு
நடனம் - கல்யாண், நோபெல்
சண்டைப் பயிற்சி - மைக்கேல் ராஜ்
தயாரிப்புநிர்வாகம் - நாகராஜ், ஹக்கீம், பாலாஜி, தயாரிப்பு மேற்பார்வை - ஏபி ரவி
தயாரிப்பு - திருமலை
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஆர்.கே. வித்யாதரன்