Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெ‌ங்க‌ட்‌பிரபு இய‌க்கு‌ம் சரோஜா

Advertiesment
வெ‌ங்க‌ட்‌பிரபு இய‌க்கு‌ம் சரோஜா
, வெள்ளி, 14 டிசம்பர் 2007 (12:23 IST)
புதுமுகங்களை வைத்து `சென்னை 28' படம் மூலம் திரை உலகை வியக்க வைத்த இயக்குனர் வெங்கட்பிரபுவின் புதிய படம் `சரோஜா'.

webdunia photoWD
முதல் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களம். மூன்று வெவ்வேறு இடங்களில் சம்பந்தமில்லாமல் நடக்கும் கதை. இவை அனைத்தும் ஒரு விபத்தாய் ஒன்றாக இணைகிற இடம் தான் கதை.

இதில், 'சரோஜா' என்ற கேரக்டரில் மும்பை மாடல் அழகி, தியேட்டர் ஆர்ட்டிஸ்டான வேகா தமிழில் அறிமுகமாகிறார். ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த இவர் மும்பை 'பிராட்வே' என்ற நாடக குழுவில் உள்ளார்.

மேலும் எஸ்.பி.சரண், பிரேம்ஜி, `சென்னை 28' சிவா, சுமந்த், சம்பத் மற்றும் பலர் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களாக ஜெயராம், பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்கள். இவர்களுடன் பேரழகி ஒருவர் நடிக்கிறார்.

`சென்னை 28' பரபரப்பான பாடல்களை இசை அமைத்த யுவன்ஷங்கர்ராஜா மீண்டும் இக்கூட்டணியில் இடம்பெறுகிறார்.

கதை-திரைக்கதை-இயக்கம் - வெங்கட்பிரபு
ஒளிப்பதிவு - சக்திசரவணன்
எடிட்டிங் - பிரவீன் ஸ்ரீகாந்த்
கலை - வித்தேஷ்
ஸ்டண்ட் - செல்வம்
நடனம் - கல்யாண்
பாடல்கள் - கவிஞர் வாலி, கங்கை அமரன்
நிர்வாக தயாரிப்பாளர்கள் - கிருஷ்ணமூர்த்தி - நாகேந்திரன்
தயாரிப்பு மேற்பார்வை - மகேந்திரன்
தயாரிப்பு - எஸ். அருணா மகேஸ்வரி

டி. சிவாவின் அம்மா கிரியேஷன்ஸ், இப்பொழுது சீமான் இயக்கத்தில் மாதவன்-பாவனா நடிக்கும் 'வாழ்த்துக்கள்' படத்தை தயாரித்து வருகிறது. இதையடுத்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil