Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌விரை‌வி‌ல் சக்கர வியூகம்

Advertiesment
‌விரை‌வி‌ல் சக்கர வியூகம்
, புதன், 5 டிசம்பர் 2007 (13:08 IST)
'நாளை' பட வெற்றியைத் தொடர்ந்து உதயபானு மகேஸ்வரன், தமது இரண்டாவது படைப்பாக 'சக்கர வியூகம்' படத்தை இயக்கி வருகிறார்.

இந்தித் திரைப்பட நிறுவனமான ஸ்ரீ அஷ்டவிநாயக் சினி விஷன், தமிழில் 'நடராஜா ஆர்ட்ஸ்' என்ற நிறுவனத்துடன் இணைந்து `சக்கர வியூகம்' என்ற தமிழ்ப் படத்தை முதல் முறையாகத் தயாரிக்கிறது.

இப்படத்தில் 'நாளை' படத்தில் நட்டுவாக வந்து கலக்கிய நட்ராஜும், மலையாள பட நடிகரான ஜெயசூர்யாவும், இந்தி மற்றும் கன்னடப்பட நடிகையான டெய்ஸி போப்னாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் பல முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் உதயபானு மகேஸ்வரன். இப்படத்திற்கு துவாரகநாத் ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். மற்றும்,

கலை - விஜயமுருகன்
எடிட்டிங் - கிருஷ்ணமூர்த்தி - சிவானந்தன்
பாடல்கள் - சிநேகன்
சண்டைப்பயிற்சி - சூப்பர் சுப்பராயன்
நடனம் - சாந்தி ஸ்ரீஹரி
ஸ்டில்ஸ் - ராமசுப்பு
இணை இயக்கம் - மணி பாஸ்கர்
தயாரிப்பு மேற்பார்வை - கே.கே.ரவி

ஆக்‌ஷனும், அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பும், ஆர்ப்பாட்டமில்லாத காதலும் கொண்ட இக்கதையின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கொல்கட்டாவில் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil