Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பில்லா படத்தின் அறிமுக விழா அண்மையில் நடந்தது

Advertiesment
பில்லா படத்தின் அறிமுக விழா அண்மையில் நடந்தது

Webdunia

, வியாழன், 29 நவம்பர் 2007 (15:38 IST)
அ‌ஜீ‌த் நடி‌த்து‌ள்ள ‌பி‌ல்லா ‌திரை‌ப்பட‌த்‌தி‌ன் அ‌றிமுக ‌விழா‌வி‌‌ல் ‌ர‌ஜி‌னி, ‌பிரபு உ‌ள்‌ளி‌ட்ட மு‌க்‌கிய ‌பிரமுக‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.

விழா‌வி‌ல் படத்தை தயாரிக்கும் ஆனந்தா பட நிறுவனத்தின் தயாரிப்பாளர் எல். சுரேஷ் பேசும் போது, நாங்க தயாரிக்கும் முதல் முழு நீள கமர்ஷியல் படம் பில்லா. முதல் படம் அஜீத் சாரை வைத்து பண்ணனும்னு ஆசைப்பட்டோம். அவர்தான் ரீமேக் ஐடியாவைச் சொன்னார். அதற்கு ரஜினியும் ஒத்துக்கிட்டார்.

அது பெரிய விஷயம். துவக்க விழாவுக்கு வந்தார். ஆடியோ ரீலிசும் இன்றைக்கு அவர் கையால் நடந்திருக்கு. படத்தோட ட்ரெய்லர் பார்த்த ரஜினி சார் சின்ன திருத்தம் சொன்னார். ஹாலிவுட் படம் மாதிரி இருக்குன்னு சொல்லிப் பாராட்டினார்" என்றார்.

விழாவில் பேசிய அஜீத், "கொஞ்ச நாட்களாகவே இந்தப் படம் பற்றி நிறைய பேசிட்டு வர்றேன். ரொம்ப எதிர்பார்ப்போட இருக்கோம்" என்றார்.

அஜீத்துடன் தீனாவுக்குப் பிறகு இணைந்திருப்பதாகக் கூறிய யுவன்ஷங்கர் ராஜாவும் விஷ்ணுவர்தனும் பள்ளித் தோழர்களாம்.

பிரபு பேசும்போது, இந்த டீம்லயே நான்தான் சீனியர். ஆனால் அஜீத், டைரக்டர் விஷ்ணுவர்தன் எல்லாரும் என்னையும் ஜுனியர் மாதிரி உணர வைச்சாங்க. அந்த அளவுக்கு உற்சாகமான இளைஞர்கள். படம் ரொம்ப ஸ்டைலா வந்திருக்கு. உயர்ந்த இடத்தில் இருந்தாலும் ரஜினிசார், கமல்சார்கிட்டே அடுத்தவங்களுக்கு எப்படி மரியாதை தரணும்னு கத்துக்கிட்டேன். அதே மாதிரி அனுபவம் அஜீத்துடன் பழகும்போது கிடைச்சுது என்று பேசி முடித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil