குரோதம் படம் மூலம் அறிமுகமான பிரேமின் புதுமைப் படைப்பு. பிரேம் டைரக்ஷனில் வெளிவரும் நான்காவது படமாகும் அசோகா.
நாட்டின் உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவரை தீவிரவாதிகள் கடத்த முயல்கின்றனர். அவாகளிடமிருந்து அவர் எப்படி காப்பாற்றப்படுகிறார் என்பதே கதை.
அசோக சக்கரத்தை நினைவுப்படுத்தும் விதமாக கதாநாயகனுக்கு அவர் தாயார் அசோகா எனப் பெயரிடுகிறார். வளரும்போதே நாட்டுப் பற்றுடன் வளரும் அவன் கமாண்டோவாக உருவாகுகிறான்.
மனதாலும் உடலாலும் ஒரு சேர வலிமையுடன் இருக்கும் அசோகா புரியும் வீர தீர சாகசங்கள் படத்தின் ஹைலைட்.
ராக்கிராஜேஷ் அமைத்துள்ள சண்டைக்காட்சிகளும் துரத்தல் காட்சிகளும் ஆங்கிலப் படங்களுக்கு நிகராக படமாக்கப்பட்டுள்ளன.
படத்தின் ஒளிப்பதிவை கவனித்திருக்கும் ஓம்பிரகாஷ் படம் முழுக்க ஒரு புதுமையான ஒளிப்பதிவை கையாண்டுள்ளார்.
கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
ஏவிஎம் ஸ்டுடியோவில் ஆஸ்பத்திரி போடப்பட்டு அதில் லிப்ட் இயங்குவது போல் அரங்கம் அமைத்து நிறைய பணம் செலவழித்து எடுத்துள்ளனர்.
படத்திற்கு சபேஷ்-முரளி இரட்டையர் மிகப்பிரமாதமாக இசைமைத்துள்ளனர். சமீபகாலமாக இசையுலகில் சாதனைகள் புரிந்து வரும் இவர்களுக்கு இந்தப் படம் மிகப்பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுக்கும்.
தமது முந்தைய படங்களிலிருந்து முழுவதும் மாறுபட்டு முற்றிலும் வேறுபட்டு கமர்ஷியலாகவும், அழுத்தமாகவும் இந்த படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார் பிரேம்.
ரகுவரன் இதில் வரும் காட்சியில் அரங்கமே அதிரும் வண்ணம் படமாக்கி உள்ளனர். லிவிங்ஸ்டன் வரும் காட்சி கலகலப்பாக் இருக்கும்.
ஆனந்த்ராஜ் சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் வலம் வர பிரேமுடன் கரம் பிடித்துள்ளார்.
கொடுத்த தேதியை வீணாக்காமல் என் கேரக்டரை மெருகேற்றி ரசிகர்களால் பாராட்டப்படும் அளவிற்கு படமாக்கியுள்ளார் பிரேம் என ராஜீவ் பாராட்டுகிறார்.
ஹாலிவுட்டில் தான் கற்றவற்றை சரியான முறையில் அசோகாவில் பயன்படுத்தி உள்ளார் பிரேம்.
பிரம்மாண்டம் - ஏராளமான பொருட்செலவு - என்ற வாசகங்களை மெய்யாக்கும் வண்ணம் இப்படத்தை இந்திரா பிரேம் தயாரித்துள்ளார்.
அனுஸ்ரீ மும்பையிலிருந்து வந்திருக்கும் புதுமுகம். அசோகாவில் அறிமுகம். இந்தப் படம் வெளிவருவதற்குள் இந்திப் படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.
பூஜாபாரதி வட இந்தியாவிலிருந்து வந்திருக்கும் இன்னொரு கவர்ச்சிப்புயல்.
தீவிரவாதத்தை தாய் மண்ணிலிருந்து அறவே அகற்ற வேண்டும் என்ற உயரிய கருத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது அசோகா.
நடிகர்-நடிகையர் : பிரேம், ரகுவரன், லிவிங்ஸ்டன், ஆனந்த்ராஜ், அனுஸ்ரீ, பூஜா பாத்ரி, ராஜீவ், நவீன்
இசை : சபேஷ் - முரளி
ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ்
சண்டை : ராக்கி ராஜேஷ்
கிராபிக்ஸ் : இமேஜ் மதி
வசனம் : ராஜா சந்திரசேகர்
தயாரிப்பு - இந்திரா பிரேம்
கதை, திரைக்கதை, இயக்கம் : பிரேம்