Entertainment Film Preview 0711 05 1071105024_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வி. ரவிசந்திரன் வழங்கும் `வாரணம் ஆயிரம்'

Advertiesment
வி. ரவிசந்திரன் வழங்கும் `வாரணம் ஆயிரம்'

Webdunia

, திங்கள், 5 நவம்பர் 2007 (14:37 IST)
`காக்க காக்க' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் கெளதம் வாசுதேவ மேனன் - சூர்யா இணையும் படம்.

இந்தி - தெலுங்கு பட உலகை கலக்கும் சமீரா ரெட்டி முதன்முறையாக தமிழில் அறிமுகமாகிறார். சூர்யாவின் இன்னொரு ஜோடியாக திவ்யா ஸ்பந்தனா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

சென்னையில் 20 நாட்களாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தொடர்ந்து டெல்லி, ஆக்ரா, மும்பை, ஐதராபாத், கொல்கட்டா, கேரளாவில் தொடர்ந்து நடைபெறுகிறது.

மேலும் இந்த மாத இறுதியில் அமெரிக்காவில் செயிண்ட் பிரான்சிஸ்கோவில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்துகிறார்கள்.

webdunia photoWD
முதன்முறையாக புரூக்ளின் யுனிவர்சிட்டியில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இரண்டு பாடல் காட்சிகளும் இதில் இடம்பெறுகிறது. அதில் ஒரு பாடல் காட்சிக்காக முதன்முறையாக வெளிநாட்டில் 'செட்' ஒன்றை பிரமாண்டமாக அமைக்கிறார்கள். இதற்காக அங்கு உள்ள டெக்னீஷியன்களை அமர்த்தி செட் அமைத்து பாடல் படமாக்கப்படுகிறது.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

ஒளிப்பதிவு - ரத்தினவேலு
கலை - ராஜீவன்
எடிட்டிங் - ஆண்டனி
பாடல்கள் - தாமரை
இசை - ஹாரிஸ் ஜெயராஜ்
ஸ்டண்ட் - பீட்டர் ஹெயின்
நடனம் - பிருந்தா மற்றும் மும்பை பிரபல நடன புயல் அமீத்கான்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - கெளதம் வாசுதேவ மேனன்
தயாரிப்பு - வி. ரவிசந்திரன்

Share this Story:

Follow Webdunia tamil