இயக்குனர் செல்வா தலைவாசல் படத்தில் இருந்து நான் அவனில்லை வரை 17 படங்களை இயக்கி உள்ளார். அவரின் 18வது படம் தோட்டா.
ஜீவன் `சண்முகம்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சண்முகம் என்ற பெயர் 'தோட்டா' என்ற பெயராக மாறி கால சூழ்நிலையில் ரவுடியாக மாற்றப்படுகிறார். நெகட்டிவ் கதாபாத்திரமாக தோன்றுகிறார் கதாநாயகன் ஜீவன்.
கல்லூரிக்கு செல்லும் நடுத்தர குடும்பப் பெண்ணாக பிரியாமணி `நளினா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மல்லிகா `மல்லிகா' என்னும் கதாபாத்திரத்தில் தெருவோர இட்லி கடை நடத்தும் பெண்ணாக வருகிறார். இந்த கதை களம் சென்னை. "தோட்டா உருவாக்கப்பட்ட ரவுடி, தானாக உருவானவனில்லை" என்கிறார் இயக்குனர் செல்வா.
"ரவுடியாக்கப்பட்டவன் ஒரு நல்ல விஷயத்தை எப்படி உருவாக்குகிறான்" என்பது தான் கதையின் வரி. மேலும் இப்படத்தில் ரகுவரன், லிவிங்ஸ்டன், தலைவாசல் விஜய், சிவகுமார், சம்பத் எல்லோருமே நடைமுறையில் நாம் சந்திக்கக்கூடிய கதாபாத்திரங்கள் தான். ஸ்ரீகாந்த் தேவா நல்ல மெலடி பாடல்களையும் தந்துள்ளார்.
படத்தின் பாடல்கள் கேரளாவிலும், ஆஸ்டிரியாவிலும் படமாக்கப்பட உள்ளது. காதலும் ஆக்ஷனும் சரிவிகிதத்தில் கலந்த இந்த கமர்ஷியல் படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
நட்சத்திரங்கள்:
ஜீவன், பிரியாமணி, சம்பத், ரகுவரன், லிவிங்ஸ்டன், சந்தானபாரதி, தலைவாசல் விஜய், சிவகுமார், மயில்சாமி, மல்லிகா, சபிதா ஆனந்த், ஹேமா சவுத்திரி.
தொழில்நுட்பக் கலைஞர்கள்:
இயக்கம் - செல்வா
ஒளிப்பதிவு - பாலமுருகன்
இசை - ஸ்ரீகாந்த் தேவா
வசனம் - ஜெ.ரமேஷ்
படத்தொகுப்பு - கிருஷ்ணமூர்த்தி
கலை - தேவராஜ்
ஸ்டண்ட் - தளபதி தினேஷ்
நடனம் - தினேஷ், ஸ்ரீதர்
பாடல்கள் - பழனிபாரதி, பா.விஜய், கபிலன்
ஸ்டில்ஸ் - ஸ்டில்ஸ் ரவி
பிஆர்ஓ - ஜான்சன்
தயாரிப்பாளர் - எம். பாஸ்கர், மாரியப்பா பாபு