Entertainment Film Preview 0710 27 1071027035_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏ.மஜீத் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் கி.மு.

Advertiesment
ஏ.மஜீத் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் கி.மு.

Webdunia

, சனி, 27 அக்டோபர் 2007 (19:39 IST)
உண்மை சம்பவங்களுடன் ஒரு காதல் கதையாக வெ‌ளிவர உ‌ள்ள ‌திரை‌ப்பட‌ம் ‌கி.மு.

யாக்கோ பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் யாகூப் தீன் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் கி.மு.!

விஜய், பிரியங்கா சோப்ரா நடித்த தமிழன் படத்தை இயக்கிய ஏ.மஜீத், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார். இவர் தற்போது அருண் விஜயை வைத்து துணிச்சல் என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

webdunia photoWD
கி.மு. -வில் புதுமுகம் ஹசன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அறிமுகமாகிறார் சாரிகா. வடிவேலு, சரண்ராஜ், வையாபுரி, டி.வி. சங்கீதா, புவனா, சிங்கமுத்து உள்ளிட்டோருடன் இயக்குனர் மஜீத்தும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இன்னொரு பிரபல இயக்குனரும் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு - கதாக. இளவரசு
இசை - கலைவாணன்
பாடல்கள் - முத்துவிஜயன், கன்னியப்பன்
சண்டைப்பயிற்சி - ஸ்பீடு மோகன்
நடனம் - சிவசங்கர், காதல் கந்தாஸ், ஜானி
கலை - கலைராஜன்
படத்தொகுப்பு - வாசு - சலீம்
தயாரிப்பு நிர்வாகம் - பரமசிவன்
தயாரிப்பு மேற்பார்வை - பாபு
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஏ. மஜீத்
தயாரிப்பு - யாகூப் தீன்

காதல் இன்று நேற்றல்ல. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பும் கூட இருந்திருக்கிறது. அதாவது காதல் என்பது இவ்வுலகில் மனிதன் பிறந்தபோதே உருவாகி அவனை ஆட்டிப்படைத்த உணர்வு என்பதை மையப்படுத்தி, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ள்து.

தன் நண்பர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மை சம்பவங்களை அவர்கள் அனுமதியுடன் செல்லுலாய்டில் பதிவு செய்கிறார் இயக்குனர்.

முதல் கட்டப் படப்பிடிப்பு இருபது நாட்கள் நடைபெற்று முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil