Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நேற்று இன்று நாளை

நேற்று இன்று நாளை

Webdunia

, வியாழன், 25 அக்டோபர் 2007 (11:49 IST)
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மகன் ரவி கிருஷ்ணா கதாநாயகான நடிக்கும் படம் நேற்று இன்று நாளை. மிஷ்கின் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக இருந்து அந்த புராஜெக்ட் கைவிடப்பட்டதால் ரவிகிருஷ்ணா இப்படத்தில் ஒப்பந்தமானார். இப்படத்தை மிக எதிர்பார்த்திருக்கிறார் ரவி. தெலுங்கு பட இயக்குனர் லஷ்மிகாந்த் படத்தை இயக்குகிறார். இதற்கு முன் இவர் ஹைதராபாத் நவாப் என்ற வெற்றிபடத்தை இயக்கி இருக்கிறார். தமிழில் இது இவருக்கு முதல் படம்.

வழக்கமான கதையாக இல்லாமல் மிக வித்தியாசமாக கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம். நாயகன் ரவி கிருஷ்ணா வாழ்க்கையில் மூன்று நாள்கள் நடைபெறும் நிகழ்ச்சிகள்தான் மொத்த கதையாம். இதில் காதல், ஆக்ஷன் என்று கலந்து சொல்லி இருக்கிறார்களாம். கதையின் நாயகன் ரவியைச் சுற்றியே படம் நகர்கிறதாம். படத்தில் ரவிகிருஷ்ணாவுக்கு மூன்று கெட்டப்புகளாம்.

இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, ஹைதராபாத்,விசாகபட்டினம் ஆகிய இடங்களில் நடத்தியிருக்கிறார்கள். குறைந்த நாளில் படத்தை முடிக்க திட்டமிட்டிருந்த இவர்கள் மொத்தம் 30 நாள்களில் கிட்டத்தட்ட மொத்த படத்தையும் முடித்துவிட்டார்களாம். இன்னும் 10 சதவீத படம்தான் மீதமிருக்கிறதாம்.

படத்தில் ரவி கிருஷ்ணாவுக்கு மொத்தம் இரண்டு கதாநாயகிகள். ஒருவர் அக்ஷரா இன்னொருவர் கேடி தமண்ணா. தெலுங்கு படத் தயாரிப்பாளர் சூர்யபிரகாஷ்ராவ் இப்படத்தை தயாரிக்கிறார். படத்தில் மொத்தம் ஐந்து பாடல் காட்சிகள் இடம்பெறுகிறதாம். கிரீடம் படத்தில் நடித்த அஜய் இதில் வில்லனாக நடிக்கிறார்.

இயக்கம்-லஷ்மிகாந்த்
தயாரிப்பு- சூர்யபிரகாஷ்ராவ்
ஒளிப்பதிவு - அருள் வின்சென்ட்
இசை - அணில்
வசனம் - பிரசன்னகுமார்
பாடல்கள் - நா.முத்துக்குமார்

Share this Story:

Follow Webdunia tamil