என் புதிய பட நிறுவனம் ''லூகாஸ் ஃபிலிம்ஸ்'' பரபரப்பாக எவனோ ஒருவன் பட வேலைகளில் ஈடுபட்டுள்ளது. டிசம்பர் 7ஆம் தேதி அன்று இந்தியாவில் ரிலீசாக தயாராகிக் கொண்டிருக்கிறது. இறுதிக்கட்ட போஸ்ட் புரடக்ஷன் மற்றும் விளம்பர வேலைகள் முழு வீச்சுடன் நடந்து கொண்டிருக்கின்றன. நிஷிகாந்த் காமத் இயக்கிய டோம்ப்விலி ஃபாஸ்ட் என்ற மராத்திய திரைப்படம்தான் எவனோ ஒருவன் என்று தமிழில் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. இது மராத்தியில் சூப்பர் ஹிட் படம். இதுவரை கிட்டத்தட்ட 27 சர்வதேச விழாக்களில் பரிசு பெற்றுள்ளது. மேலும் சிறந்த மராத்தி படத்திற்கான தேசிய விருதையும் டோம்பிவிலி ஃபாஸ்ட் பெற்றுள்ளது.என்னுடைய அடுத்த முயற்சி இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் நிகழாத ஒரு புதுமை. அதாவது எவனோ ஒருவன் படம் டிசம்பரில் திரையிடப்படுவதற்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. (யு.எஸ்., கனடா, மத்திய கிழக்கு நாடுகள், சிங்கப்பூர் மற்றும் மலேசியா) இங்கு தரமான இந்திய படங்கள் பெறும் வரவேற்பினை பெறுகின்றன. அங்கு வசிக்கும் இந்திய மக்களுக்கு நமது திரைப்படங்களின் மீது அதிக ஆர்வம் உள்ளபடியால், எச்.எஸ்.பி.சி மற்றும் சந்தூர் ஆகிய பெரிய நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்ய முன் வந்துள்ளன.
படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் இவ்விழாவில் பங்கு பெற உள்ளனர். மேலும், ஒரு சிறப்பு போட்டி ஒன்றை நிகழ்த்தி, அதில் பங்கு கொண்டு வெற்றி பெறும் 10 நபர்கள், நடிகர் குழுவுடன் சிறப்பு Dinner-க்கு அழைத்து செல்லப்படுவார்கள். சிறப்பு திரையில் நிகழ்ச்சியின் இடம் மற்றும் தேதிகள் (US & மத்திய கிழக்கு நாடுகளில்) பின்வருமாறு :
26 அக்டோபர் - லாஸ் ஏஞ்சலஸ்
27 அக்டோபர் - நியூயார்க்
6 நவம்பர் - பெஃஹ்ரின்
7 நவம்பர் - ஓமன்
8 நவம்பர் - துபாய்
11 நவம்பர் - கதார்
12 நவம்பர் - அபுதாபி
நடிகர்கள் : ஆர். மாதவன், சீமான் மற்றும் பலர்
நடிகைகள் : சங்கீதா, பேபி ஸ்ருதி
ஒளிப்பதிவு :சஞ்சய் ஜாதவ்
பின்னணி இசை : பி. சமீர்
எடிட்டிங் : அமித் பவார்
மக்கள் தொடர்பு : நிகில்
வசனம் மேற்பார்வை : சீமான்
இசை : ஜி.வி. பிரகாஷ்
கலை : நாகு
பாடல்கள் : நா. முத்துக்குமார்
வசனம் : ஆர். மாதவன்
தயாரிப்பு :ஆர். மாதவன்
கதை-திரைக்கதை-இயக்கம் : நிஷிகாந்த் காமத்