Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூப்பர் ஹூரோ' சரத்குமார் நடிக்கும் கனகரத்னா முவீஸ் நம்நாடு

சூப்பர் ஹூரோ' சரத்குமார் நடிக்கும் கனகரத்னா முவீஸ் நம்நாடு

Webdunia

, சனி, 28 ஜூலை 2007 (18:33 IST)
வசூலில் சாதனை படைத்து மிகப்பெரிய வெற்றி பெற்ற பரமசிவன், போக்கிரி வெற்றிப்படங்களைத் தொடர்நது எஸ். சத்யராமமூர்த்தி வழங்க, கனகரத்னா மூவீஸ் சார்பில் எஸ்.ரமேஷ்பாபு பெரும் பொருட்செலவில் மிகப்பிரமண்டமாகத் தயாரிக்கும் படம் - நம்நாடு.

'சூப்பர் ஹூரோ' சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை திரைக்கதை எழுதி இயகுகிறார் சுரேஷ். இவர் ஏற்கனவே சரத்குமார் நடித்த அரசு, கம்பீரம் போன்ற படங்களை இயக்கியவர். தவிர விஜயகாந்த் நடித்த சபரி படத்தையும் இயக்கியவர்.

எம்.ஜி.ஆர். நடித்த நம்நாடு படத்தின் தலைப்பில் உருவாகும் இப்படமும் இன்றைய சமுதாயத்துக்கு தேவையான நல்லதொரு கருத்தை உள்ளடக்கிய படமாக உருவாகிறது. 'நாட்டை திருத்த நினைப்பவர்கள் முதலில் தன் வீட்டை திருத்த வேண்டும்' என்ற கருத்தை சொல்கிற நம்மநாடு படத்தில், தான் விரும்பும் மாற்றத்தை தன் வீட்டிலிருந்து தொடங்கி நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழும் முற்போக்கு சிந்தனையாளராக நடிக்கிறார் சரத்குமார்.

நம்நாடு படத்தில் சரத்குமார் ஜோடியாக நடிக்கிறார் கார்த்திகா. மலையாளத்தில் சுரேஷ்கோபி போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் மூன்று படங்களில் நடித்திருக்கும் கார்த்திகா, நம்நாடு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

சரத்குமார் நடித்த நாட்டாமை, சூர்யவம்சம் சூப்பர்ஹிட் வெற்றிப்படங்களின் வரிசையில் நம்நாடு படமும் இடம் பிடிக்கும்! அந்த அளவுக்கு அற்புதமான குடும்பக்கதை அம்சம் கொண்டதே நம்நாடு படம். இப்படத்தில் அரசியலும் உண்டு. இதுவரை தமிழ்ப்படங்களில் கண்டிராத அளவுக்கு வித்தியாசமான அரசியல் விஷயங்களை பின்னணியாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் பற்றி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும், நம்நாடு படத்தில் அரசியலை புதிய சிந்தனையோடு, மாறுபட்ட கோணத்தில் கையாண்டிருகிறார் இயக்குநர் சுரேஷ். அன்றைய அரசியல்வாதிகள் நம் நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடினார்கள். இன்றைய அரசியல்வாதிகளோ தங்களின் சுயநலத்துக்காக உழைத்துக் கொண்டிருகிறார்கள். இந்த நிலை மாறி, சேவை மனப்பான்மை கொண்ட தலைவர்கள் மீண்டும் வர வேண்டும். அப்போதுதான் நம் நாடு முன்னேறும் என்ற புரட்சிகரமான கருத்துக்களை சரத்குமார் வழியாக சொல்வதன் மூலம் இன்றைய அரசியலில் மறுமலர்ச்சியை தோற்றுவிக்கும் முயற்சியை செய்கிறது நம்நாடு படம்.

அரசியல் பின்னணி இருந்தாலும், நம்நாடு படம் அடிப்படையில் அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய குடும்பப்படமே! சுருக்கமாக சொல்வது என்றால் ஏகப்பட்ட குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய குடும்பத்தின் கதையே இது.

ஒரு அரசியல் கட்சியின் இளைஞர் அணி தலைவராக, முத்தழகன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சரத்குமார் பிறகு உள்துறை அமைச்சராக உருவெடுக்கிறார். அவர் எப்படி இவ்வளவு பெரிய உயரத்தை எட்டிப்பிடித்தார் என்பதுதான் நம்நாடு படத்தின் மிக முக்கியமான திருப்பம் மற்றும் சுவாரஸ்யம். உள்துறை அமைச்சரான சரத்குமாருக்கும், அவரது அப்பாவான கல்வி அமைச்சர் நாசருக்கும் இடையில் நடக்கும் போரட்டம்தான் இப்படத்தில் பரபரப்பை பத்த வைக்கும் அம்சங்களாக அமைந்திருக்கின்றன.

அது மட்டுமல்ல. சரத்குமாருக்கு பன்ச் டயலாக்குகளும் பஞ்சமில்லாமல் இடம் பெற்றிருக்கின்றன நம்நாடு படத்தில்! இப்படத்தின் வசனகர்த்தா நடிகர் ரமேஷ்கண்ணா! அடிப்படையில் இயக்குநரான இவர் பன்ச் டயலாக்கில் பட்டையைக் கிளப்பியிருக்கறார். நம்நாடு படத்தில் சரத்குமார் பேசும் ஒவ்வொரு வசனமும் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் துள்ள வைக்கப்போவது உறுதி. திரையரங்கங்களில் எழும் கைதட்டலில் காதுகள் காயப்படும். வசனகர்த்தாவான ரமேஷ்கண்ணா நம்நாடு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.


நம்நாடு படத்துக்கு தமிழ்சினிமா வரலாற்றில் மட்டுல்ல, இந்திய சினிமா வரலாற்றிலும் இடம் உண்டு. காரணம்.. இப்படத்தில் ஒன்பது இயக்குநர்கள் நடித்திருக்கிறார்கள். தலைமகன் படத்தின் இயக்குநரான சரத்குமார், நாசர், மணிவண்ணன், ரமேஷ்கண்ணா, சரண்ராஜ், பொன்வண்ணன், டி.பி.கஜேந்திரன். சந்தானபாரதி, ராஜ்கபூர் ஆகியோர்தான் அந்த இயக்குநர்கள்!

சென்னையை கதைக்களமாகக் கொண்டதால், நம்நாடு படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னையிலேயே படமாக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தை மிகப் பெரிய வீடாக மாற்றி படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. பல லட்சம் செலவில் கலை இயக்குநர் ஷிவாயாதவ் தன் குழுவினருடன் பல நாட்கள் பாடுபட்டு இந்த வீடு செட்டை நிர்மாணித்திருக்கிறார். அது மட்டுமல்ல, வி.ஜி.பி. தங்கக்கடற்கரையில் ஒரு கோவில் செட்டும் நிர்மாணிக்கப்பட்டு, அங்கு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. தேர்தல் நடப்பது போன்ற ஒரு காட்சிக்காக, தேர்தல் களத்தையே செட்டாகப் போட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

நம்நாடு படத்தின் பாடல் காட்சிகள் திருவனந்தபுரத்திலும், மலேஷியா, சிங்கப்பூர், பாங்காக் போன்ற வெளிநாடுகளிலும் படமாக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. மலேஷியா, சிங்கப்பூர், பாங்காக் போன்ற நாடுகளில் ஏற்கனவே பல படங்கள் படமாக்கப்பட்டிருந்தாலும், நம்நாடு படத்தின் பாடல் காட்சிகள் இதுவரை கேமராவின் பார்வை படாத புதிய லொகேஷன்களில் படமாகவிருக்கிறது.

இப்படத்தின் அனைத்து பாடல்களையும் வித்தியாசமான மெட்டுகளின் மூலம் சூப்பர்ஹிட் பாடலாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா.

நம்நாடு படத்தின் ஆக் ஷன் பிளாக் அதிரடியாக மட்டுமல்ல, ஆங்கிலப்படங்களுக்கு நிகராகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் சுரேஷ் தன் முந்தைய படங்களில் ஆக் ஷன் காட்சிகளில் முத்திரை பதித்தவர். அவற்றை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு நம்நாடு படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகளில் தனிக்கவனம் செலுத்தி பிரம்மாண்டமாக படமாக்கியிருக்கிறார்.

நம்நாடு படத்துக்காக உடம்பை குறைத்திருக்கும் சரத்குமார், சண்டக்காட்சிகளில் இதுவரை செய்யாத ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார்.

கனகரத்னா மூவீஸ் தயாரிக்கும் படங்களில் செலவைப்பற்றி கவலைப்படாத பிரம்மாண்டம் இருக்கும். நம்நாடு படமும் இதற்கு விதிவிலக்கில்லை. பெரும்பாலான காட்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கொண்டே படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. தேர்தல், போரட்டம், கலவரம் போன்ற காட்சிகளில் ஆயிரக்கணக்கான துணை நடிகர் நடிகைகள் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். சென்னையின் பரபரபான முக்கிய வீதிகளில் பல காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன.

மொத்தத்தில் நம்நாடு படம், பரபரப்பான அரசியல் பத்திரியை திரையில் பார்த்த உணர்வைத் தரும் என்பது உறுதி!

கனகரத்னா மூவீஸ் நம்நாடு நட்சத்திரங்கள்:

'சூப்பர் ஹூரோ' சரத்குமார், கார்த்திகா, நாசர், மணிவண்ணன், விஜயகுமார். ரமேஷ்கண்ணா, சரண்ராஜ், பொன்வண்ணன், பிரகதி, தீபு, அபிதா, இளவரசன், ரியாஸ்கான், பாண்டு, டி.பி.கஜேந்திரன், சந்தானபாரதி, ராஜ்கபூர், ரூபஸ்ரீ, மதன்பாப், சி.ஆர்.சரஸ்வதி, நெல்லை சிவா மற்றும் பலர்...

தொழில்நூட்பக்கலைஞர்கள்:

வசனம்: ரமேஷ்கண்ணா

ஒளிப்பதிவு : சுரேஷ்தேவன் டி.எஃப்.டெக்.,

இசை: ஸ்ரீகாந்த்தேவா

பாடல்கள்: கபிலன், பா.விஜய்

சண்டைப்பயிற்சி: சூப்பர் சுப்பராயன்

கலை: எம்.ஷிவாயாதவ்

படத்தொகுப்பு: ஜி. சசிகுமார்

மக்கள் தொடர்பு: சிங்காரவேலு, மெளனம் ரவி

தயாரிப்பு நிர்வாகம்: சம்பத். பழனிச்சாமி

தயாரிப்பு மேற்பார்வை: தேவர் பிலிம்ஸ் முருகன்

திரைக்கதை, இயக்கம்: சுரேஷ்

தயாரிப்பு நிறுவனம்: கனகரத்னா மூவீஸ்

தயாரிப்பு: எஸ். ரமேஷ்பாப

Share this Story:

Follow Webdunia tamil