Publish Date: Sat, 21 Jul 2007 (13:19 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:02 IST)
தொழிலதிபரான ஆண்டணி ஈ.எல்.கே. புரடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரித்த மனதோடு மழைக்காலம் படத்தை அடுத்து தற்போது ஜித்தன் ரமேஷ் நடிக்கும் புலி வருது என்ற படத்தை நிறைந்த பொருட் செலவில் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜீவா நடிக்கும் தெனாவட்டு என்ற படத்தையும் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கிறார் ஆண்டனி.
இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் ஜீவாவுக்கு ஜோடியாக, பூனம்பாஜ்வா என்ற புதுமுகம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
ஜீவா, பூனம், பாஜ்வா தவிர சாய்குமார், ரவிகாளே, சபி, கஞ்சாகருப்பு, மனோபாலா, ஜிஜே சினிமா ஜெயபிரகாஷ், மயில்சாமி, டெல்லி கணேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏவிஎம் ஸ்டுடியோவில் பதினைந்து லட்ச ரூபாய் செலவில் போடப்பட்ட பிரம்மாண்டமான செட்டில், எனக்கென பிறந்தவளே, உயிரினில் கலந்தவளே என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. ஜீவா, பூனம்பாஜ்வா பங்கு பெற்ற இப்பாடல் காட்சி தினேஷ் மாஸ்டர் நடன இயக்கத்தில் படமானது.
சென்னை தவிர, மதுரை, பண்ருட்டி, அருக்குவேலி, ராஜமுந்திரி போன்ற ஊர்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.
ஒளிப்பதிவு - வெற்றி
இசை - ஸ்ரீகாந்த்தேவா
பாடல்கள் - நா. முத்துக்குமார்
படத்தொகுப்பு- ராஜா முகம்மது
கலை - உமேஷ் கே. ரூமேஷ்
நடனம் - சிவசங்கர், பிருந்தா, தினேஷ்
சண்டைப்பயிற்சி - அனல் அரசு
தயாரிப்பு நிர்வாகம் - மாரியப்பன்
தயாரிப்பு மேற்பார்வை - எம்.எம்.எஸ். மூர்த்தி
இணை இயக்கம் - பார்த்தசாரதி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - வி.வி. கதிர்
தயாரிப்பு - ஆண்டனி
ராம், ஈ, டிஷ்யூம், அரண் போன்ற படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் வரும் ஜீவா இந்தப் படத்தில் வித்தியாசமான வேடம் ஏற்று நடிக்கிறார். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிறது தெனாவட்டு.