கிராமத்திலும் நகர பின்னணியிலும் நடக்கும் காதல் கதை `ஒரு பொண்ணு ஒரு பையன்'. `வருஷம் 16', `காதலுக்கு மரியாதை' வரிசையில் உறவுகளின் பின்னணியிலும் நடக்கக்கூடிய ஒரு உன்னதமான படமாக எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தப் படம் பற்றி அதன் இயக்குனர் நரேன் தெய்வநாயகம் கூறுகையில், தனது முந்தைய படமான `மனதை திருடிவிட்டாய்' காமெடியிலும் பாடல்களாலும் எந்தளவிற்கு பேசப்பட்டதோ அதேபோல் இந்த படமும் பேசப்படும். இந்த படத்திற்காக சுமார் 30 பாடல்கலுக்குமேல் கம்போஸ் பண்ணி 6 பாடல்களை தேர்வு செய்தோம். இந்த படம் கார்த்திக் ராஜாவிற்கு திருப்புமுனையாக இருக்கும் என்று தெரிவித்தார்.
இப்படத்தில் மலையாள நடிகர் மது முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நீண்ட இடைவேளைக்குப்பின் பானுப்பிரியா, மதுவின் மகளாக நடிக்கிறார். ஹீரோவின் அப்பாவாக சரத்பாபு நடிக்கிறார். வில்லனாக நடிக்கும் சரண்ராஜ் இந்த படத்தில் முக்கிய குணசித்திர வேடத்தில் மதுவின் மகனாக வருகிறார்.
இந்த படத்தின் இன்னொரு சிறப்பம்சம் தணிக்கை குழுவினர் மற்றும் உறுப்பினர்கள், வன்முறைகள் இல்லாத ஒரு மென்மையான காதல் கதையை வலிமையாக சொல்லியிருக்கிறீர்கள் என்று பாராட்டியதுதான் என இயக்குனர் குறிப்பிட்டார்.
நடிகை சுதாவின் மகன் சந்தீப்தான் இந்தப் படத்தின் ஹீரோ. ஹீரோயின் ரூபா. 3 மாத காலம் தேடி அலைந்து முடிவில் கேரள மாநிலம் கொல்லத்தில் கிடைத்த ஒரு அழகிய இளம்பெண். இவர் ஒரு கிளாசிக்கல் டான்ஸர். அதனால் அவர்களை நடிக்க வைப்பதில் எங்களுக்கு அதிக சிரமம் இருந்ததில்லை. மலையாள படங்களில் மம்முட்டி, மோகன்லால் கூட நடித்துவரும் முத்தச்சி சுபலஷ்மி என்ற நடிகை இந்த படத்தில் சார்லியுடன் சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளார்.
கேமராமேன் அருள்தாஸுக்கு இந்த படத்தின் ஒளிப்பதிவின் சிறப்பை பார்த்து அடுத்த படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பாடலாசிரியர் ஆண்டாள் பிரியதர்ஷினி `யானைப்பசி' என்ற பாடலை எழுதி அமர்க்களமாக அறிமுகமாகி இருக்கிறார்.
`மச்சி' படத்தில் நடித்த சுபா புஞ்சா இன்னொரு கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது.
நடிகர்கள்:
சந்தீப், ரூபா, சுபா புஞ்சா, மது, சரத்பாபு, பானுப்பிரியா, சரண்ராஜ், சார்லி, சுப்புலட்சுமி, கல்யாணி, கிரேன் மனோகர் ஆர்த்தி மற்றும் பலர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : நரேன் தெய்வநாயகம்
இசை : கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவு : அருள்தாஸ்
எடிட்டிங் : சதீஷ்
பாடல்கள் : பா.விஜய், நா.முத்துகுமார், யுகபாரதி, ஆண்டாள் பிரியதர்ஷினி
நடனம் : பாலகுமார், ரேவதி, செந்தாமரை, சுரேஷ்
சண்டைபயிற்சி : தவசிராஜ்
மக்கள் தொடர்பு : வெங்கட்
தயாரிப்பு : டாக்டர். பி.கே. கேசவராம் மற்றும் கே. பரத்கிருஷ்ணா