நிலா முத்தம்.... அதிர்ந்து போன அர்ஜீன்
, செவ்வாய், 26 ஜூன் 2007 (15:01 IST)
ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிசந்திரன் தயாரித்து வரும் பிரம்மாண்டமான படைப்பு "மருதமலை".இதன் படப்பிடிப்பு மும்பை, ஐதராபாத், சென்னை மற்றும் பல பகுதிகளில் நடந்து வருகிறது.
வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார், திவ்யா வெளி சுவரில் தொடங்கவிடப்பட்டிருந்த செடி தொட்டியிலும் தண்ணீரை ஊற்ற ஏணியை எடுத்து கொண்டு வந்து ஏறுகிறார். மேலே ஏறி நீரை ஊத்திக் கீழே பார்ப்பதற்குள் ஏணியுடனேயே அப்படியே கீழே சரிந்து விழ அந்த பக்கம் வந்த மருதமலை விலகி கொள்ள நினைப்பதற்குள் அவன் மேலேயே விழுந்து கீழே இருவரும் சரிகிறார். நிலா முத்தம் கொடுக்க.. அதிர்ந்து போனார் மருதமலை.இநத் காட்சி சென்னை பெருங்குடியிலுள்ள ஒரு அப்பார்ட்மென்டில் படமாக்கப்பட்டது. இதில் மருதமலை வடிவேல், ரகுவரன், லால், நாசர், கலைராணி, தண்டபாணி, ஷண்முகராஜன், ஸ்ரீலதா, எம்.என். ராஜம், ராஜேஷ், மும்பை அறிமுகமான சரண்பிரீத் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டும் என்ற நிலையில் இருக்கும் இப்படம் ஜீலை மாதம் திரைக்கு வருகிறது.கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் : சுராஜ்இசை : டி.இமான்ஒளிப்பதிவு : எஸ்.வைத்திகலை : தோட்டாதரணிபாடல்கள் : பா.விஜய், தபுசங்கர்எடிட்டிங் : மனோஜ்ஸ்டண்ட் : அல் அமீன்இணை தயாரிப்பு : டி.சுக்ரன்தயாரிப்பு : வி.ரவிசந்திரன்