இயக்குனர் கே.எஸ். அதியமானின் "தூண்டில்"
, செவ்வாய், 26 ஜூன் 2007 (14:55 IST)
"
மீடியன்ட் கார்ப்" மற்றும் "குட்வின் மூவிஸ்" சார்பில் எம். ராஜ்குமார், எஸ்.எஸ்.ஆர்.தில்லை நாதன் இவர்கள் தயாரிக்க, கே.எஸ்.அதியமான் இயக்குகிறார். ஷாம் கதாநாயகனாகவும், சந்தியா, "குத்து" ரம்யா (தற்போது திவ்யா) ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்திருக்கின்றனர்."
நடித்திருக்கின்றனர்" என்ற வார்த்தையின் ஆச்சரியம் உண்மை தான். தொடக்க விழாவிற்கு கலர் கலராய் 90 பக்கங்களில் அழைப்பிதழ், படப்பிடிப்பிற்கு செல்லும் போது ஒரு விளம்பர பரபரப்பு... என்று விலாவாரியாக அமர்க்களப்படும் இந்த சினிமா விறுவிறுப்புக்களுக்கிடையில்.. இப்படிப்பட்ட எந்த கண் கட்டி வித்தைகளும் செய்யாமல் உண்மையான பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் படபபிடிப்பு முழுவதுமே முடிவடைந்து ரிலீசிற்கு தயாராக நிற்கிறது "தூண்டில்".அமைதியான மெல்லிய இரண்டு மனசுகளுக்கு நடுவே "சூழ்நிலை" வில்லனாக முளைக்க அதனால் இரண்டு மனங்கள் படும் பாட்டை விவரிக்கிறது "தூண்டில்" என விளக்கம் சொல்கிறார் இயக்குனர் கே.எஸ்.அதியமான்.காலச்சூழ்நிலைகளில் தட்ப வெப்பம் பாதிக்கப்படுகிறதோ இல்லையோ... "மனசு" நிச்சயம் மாறித் தான் போகிறது. குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளை மனசுக்காரன் ஒரு கட்டத்தில் சூழ்நிலை என்ற அரக்கன் புகுந்து கொள்ள, அவனைச் சுற்றி ஏற்படும் திசை மாற்றங்கள், வெகு அழகாக சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். தற்போதைய நாகரீக உலகில் நிறைய குடும்பங்களில் நடக்கும் உண்மை இது. அடிக்கும் காற்றில் பறக்கும் தூசு மாதிரி சூழ்நிலையோடு ஓடும் மனக் கைதிகளின் நிலையை கொஞ்சம் மனக்கவலையோடு ஓட்டிப் பார்த்திருக்கிறேன் என்றவரிடம்,சரி! "தொட்டாற்சிணுங்கி", "சொர்ணமுகி", "ப்ரியசகி" வரிசையில் இதுவும் குடும்ப பாங்கு தானா? என்றால்...மெல்லிய சிரிப்புடன் தொடர்கிறார். நிச்சயம் குடும்பத்தை மையமாக வைத்து நிற்கும் சம்பவங்கள் என்னை ஒரு ராட்சச அரக்கன் மாதிரி ஆக்கிரமித்திருப்பது உண்மை தான். ஆனால் "தூண்டில்" படத்தின் அடிப்படை குடும்பம் என்றால், நடக்கும் கதை களத்தின் சாயல் வேறு. கொஞ்சம் தொட்டுக் கொள்ள ஊறுகாயும், காரமும் உண்டு. காற்றாடி சுழலும் போது சுற்றியுள்ள தும்பு தூசுகளை புரட்டிக் கொண்டு சுழலுமே அந்த மாதிரி இதில் நிறைய மனங்கள் சரியான பாதையை நோக்கி புரட்டிப் போடப்படலாம். யார் கண்டா?உண்மை... படம் ரெடியாக இருக்கிறது... பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றவர் நிதானித்து.. பாஸ்போர்ட், விசா எடுக்காமல்.. வெறும் 50 ருபாயில் லண்டனை ஒரு ரவுண்ட் அடித்து விட்டு வரலாம் இந்தப் படத்தில். அருவியிலிருந்து விழுந்து ஓடும் நீர் எப்படி பளிச்சென்று இருக்குமோ அப்படி ஒரு பளிங்கு ஒளிப்பதிவில் லண்டனை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறார் பதிவாளர் டி.ஆனந்தகுமார். நிச்சயம் என் மனசின் கண்கள் அவர். நினைத்ததை படத்தில் என்னால் கொண்டு வர முடிந்திருக்கிறது என்கிறார் இயக்குனர் கே.எஸ்.அதியமான்.செதுக்கும் வேலையை (எடிட்டிங்) வி.எம்.உதயசங்கர் ஏற்றியிருக்கிறார். படம் முழுவதும் லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது. லண்டனில் மிகப்பிரபலமான ·பைன் வுட்ஸ் ஸ்டுடியோஸிடமிருந்து உபகரணங்களையும், தொழில் நுட்ப கலைஞர்களையும் பயன்படுத்தி மிகப்பிரமாண்ட முறையில் தயாராகியிருக்கும் "தூண்டில்" விரைவில் திரையரங்குகளின் கதவுகளை தட்ட இருக்கிறது.ஷாம், சந்தியா, குத்து "ரம்யா", விவேக், ரேவதி, ஆர்.கே.தொழில்நுட்பக் கலைஞர்கள்இயக்கம்- கே.எஸ்.அதியமான்ஒளிப்பதிவு-டி.ஆனந்தகுமார்இசை-அபிஷேக்ரேஎடிட்டர்-வி.எம்.உதயசங்கர்ஆர்ட் டைரக்டர்-ஜனாநடனம்-விஷ்ணு, காதல் கந்தாஸ்சண்டைப் பயிற்சி-கஜினி குபேரன்தயாரிப்பு நிர்வாகம்-டி.வி.சசிதயாரிப்பு: எம்.ராஜ்குமார், தில்லைநாதன்