பெண்கள் பாடி ஆடிய கானாப் பாட்டு
பழனியப்பா கல்லூரி படத்துக்காக பெண்கள் பாடி ஆடிய கானாப் பாட்டு வைகாசிப் பொறந்தாச்சு, ஆத்தா உன் கோயிலிலே, தூது போ செல்லக்கிளியே, தெற்குத் தெரு மச்சான், பொண்டாட்டி ராஜ்யம், தை பொறந்தாச்சு, பரசுராம் உட்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த கே.பிரபாகரனின் அன்பாலயா பிலிம்ஸ் நிறுவனம் அடுத்து தயாரித்து வரும் படம் "பழனியப்பா கல்லூரி".இப்படத்தில் பிரதீப் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அர்ஜுமான் அறிமுகமாகிறார். மற்றும் அட்சயா, சண்டக்கோழி ராஜா, தரணி, பாபூஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.அண்மையில் தொடங்கிய் இப்படத்தின் படப்பிடிப்பு, மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது."
பழனியப்பா கல்லூரி"-யில் படிக்கும் மாணவர்களில் யாருக்கேனும் பிறந்தநாள் என்றால், அந்த மாணவரை சந்தோஷப்படுத்தும் வகையில் மாணவர்கள் கானாப்பாட்டு பாடி மகிழ்விப்பார்கள். அந்த வழக்கப்படி பார்த்திபனின் (பிரதீப்) பிறந்த நாள் அன்றும் மாணவர்கள் கானாப் பாட்டு பாட தயாராகிறார்கள். அதைப் பார்த்ததும் அருகில் நின்ற சக மாணவியான (அட்சயா), "எப்போதும் மாணவர்களே தான் கானாப்பாட்டு பாடணுமா? ஒரு சேன்ஞ்-க்கு மாணவிகளான நாங்கள் கானாப்பாட்டு பாடுகிறோம்" என்று சொல்லிவிட்டு, "
ங்கோயா கோயாபோடா ங்கோயா கோயா"-
என்று பாடி ஆடத் தொடங்குகிறார்கள்.இந்தக் காட்சியில் கல்லூரி மாணவ-மாணவிகளாக சுமார் இருநூறு துணை நடிகர்-நடிகைகள் பங்கு பெற்றார்கள்.இசை - ஆர்.பி. பட்நாயக்ஒளிப்பதிவு - சீனுபாடல்கள் - பா.விஜய், நா.முத்துகுமார், யுகபாரதி, காளிதாசன், கபிலன், பவன்கலை - மோகன மகேந்திரன்நடனம் - சிவசங்கர், பாலாஜிசண்டைப்பயிற்சி - ஜாக்குவார் தங்கம்வசனம் - கிருஷ்ணா டாவின்ஸிதயாரிப்பு நிர்வாகம் - முனிரத்னம்தயாரிப்பு மேற்பார்வை - கே.பாலகுமார்