Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காரில் வந்தவனை அடித்து நொறுக்கிய அருண்விஜய்

Advertiesment
அருண்விஜய்

Webdunia

Webdunia
அபலை பெண்ணுக்காக காரில் வந்தவனை அடித்து நொறுக்கிய அருண்விஜய

பரபரப்பான ரோடு. சிக்னலில் ஒரு அபலை கர்பிணி பெண் கார் துடைக்கும் துணி விற்கிறாள். ஒவ்வொரு கார் அருகேயும் சென்று வாங்கும்படி கெஞ்சுகிறாள். ஒரு காரில் பணக்கார இளம் ஜோடி சில்மிஷம் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த கர்பிணி பெண் காரின் கண்ணாடியை தட்டி துணி வாங்கிக் கொள்கும்படி கேட்க, ஆத்திரத்தோடு காருக்குள் இருந்த ஆள் கதவை திறந்து அவளை தள்ளிவிட, இதை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அருண் அவனின் ஆனவத்தையும் பொது இடத்தில் செய்யும் தவறையும் தட்டி கேட்க தடாலடியாக அவனை அடித்து அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்கும்படி சொல்கிறார். ஒரு பெண் பிச்சை எடுக்காமல் தன்னால் ஆன சிறு தொழிலாக தன் கர்பத்தையும் பொருட்படுத்தாமல் சுட்டெரிக்கும் வெயிலையும் பாராமலும் சொர்ப்ப காசுக்கா பிழைக்கும் அவளிடம் உன் பணக்கார திமிரை காட்ட உரிமையில்லை, முடிந்தால் உதவி செய் இல்லை என்றால் உபத்திரவம் செய்யாதே என்றும் அதேபோல் மக்கள் நடமாடும் ஒரு போக்குவரத்து நிறைந்த இடத்தில் உன் காம இச்சையும் காட்டுவது தவறு என்று ஆவேசத்துடன் அவனுடன் மோதுகிறார். இதையெல்லாம் பின்னாலிருந்து கவனித்துக் கொண்டிருக்கிறாள் வேதா தன்னை பல்வேறு தருணத்தில் மனதை தொட்டவன் இன்று இங்கு ஒரு அநீதியை தட்டி கேட்கும் அவனது மனோபாவம் அவளை மிகவும் கவர்கிறது. காதலை மேலும் வலுவாக்குகிறது. இப்படி ஒரு காட்சி நிரன் கிரியேஷன்ஸ் தயரிக்கும் "வேதா" திரைப்படத்திற்காக கோடை வெயிலில் Besant Nagar Main Roadல் படமாக்கப்பட்டது. அருணாக அருண்விஜய், வேதாவாக ஷீலா நடித்தனர். இரண்டாவது நாயகனாக ஜரோவதன் அறிமுகமாகிறார். இவர் தமிழக கவர்னரின் பேரன் ஆவார். மற்றும் சீதா, விவேக் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு-சாண்டானிய
இசை-ஸ்ரீகாந்த் தேவ
எடிட்டிங்-வி.ஜெய்சங்கர
நடனம்-தினேஷ
ஸ்டண்ட்-சுப்பர் சுப்பராயன
கதை, திரைக்கதை, தயாரிப்பு-வாசுபாஸ்கர
வசனம், இயக்கம்-ஆர்.நித்யகுமார்.

Share this Story:

Follow Webdunia tamil