Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மஞ்சு ஸ்ரீ சினி மேக்கர்ஸ் ஆயிரம் நிலவே வா

மஞ்சு ஸ்ரீ சினி மேக்கர்ஸ்  ஆயிரம் நிலவே வா

Webdunia

சித்தர் ஸ்ரீ காகபுஜுண்டர் தர்மலிங்க சுவாமிகள் அருளாசியுடன் இந்த படத்தை துவங்கியிருக்கிறார் இயக்குனர் பார்த்தி பாஸ்கர்.

Webdunia
அலைகள் ஒய்வதில்லை, கோழி கூவுது, ராஜாதி ராஜா, சங்கார வேலன் போன்ற வெற்றிப்படங்களை தயாரித்தவரும், இசைஞானி இளையராஜாவின் அண்ணனுமான அமரர் ஆர்.டி.பாஸ்கரின் மூத்த மகன் இவர். ஆயிரம் நிலவே வா படத்தின் மூலம் தனது தம்பி ஹரி பாஸ்கரை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். தனது தந்தை உயிரோடு இருந்திருந்தால் எப்பபடி தனது இளைய மகனை திரையுலகத்தில் அறிமுகம் செய்திருப்பாரோ, அந்தளவு நம்பிக்கையோடும், ஆசிர்வாதத்தோடும் இந்த படத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறார் நான் வணங்கும் சித்தர் ஸ்ரீகாகபுஜுண்டர் தர்மலிங்க சுவாமிகள் என்று நெகிழ்ந்து பேசுகிறார் பர்த்தி பாஸ்ரீகர்.

ஆயிலம் நிலவே வா எப்படியிருக்கும்? சுருக்கமாக சொல்ல ஆரம்பித்தார் பார்த்தி பாஸ்கர். அலைகள் ஒய்வதில்லை, பன்னீர் புஷ்பங்கள் போன்ற படங்கள் வெளிவந்த போது இளைஞர்கள் மத்தியில் எப்படி உணர்ச்சி அலைகள் உருவாயினவோ, அப்படி ஒரு உணர்வை உருவாக்கி தரப்போகும் படமாக இரக்கும் இந்த ஆயிரம் நிலவே வா! இந்த கதையை எனது தம்பி ஹரிக்காகவே உருவாக்கினேன். ஒரு புதுமுகத்தை வெற்றிப்பட நாயகனாக்க என்னென் விஷயங்கள் இருக்க வேண்டுமோ, அதையெல்லாம் என் படத்தில் வைத்திருக்கிறேன் என்று புதிர் போடுகிறார் பார்த்தி. அவர் சொன்ன மாதிரியே "வாடி என் கப்ப கிழங்கே" பாடலை காலத்திற்கு ஏற்ற மாதிரி கலாட்டா காக்டெயில் ஆக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா!

இவர் பார்த்தி பாஸ்கரின் மைத்துனர். 24 மணி நேரமும் போதாமல் இசையமைத்து கொண்டிருக்கும் பிஹியான ஸ்ரீகாந்த் தேவா, இந்த படத்திற்காக தன்னுடைய நேரத்தின் பெரும் பகுதியை ஒதுக்கி கொடுத்திருக்கிறார். உல்லாசம் படத்தில் பார்த்தி பாஸ்கர் எழுதிய முத்தே முத்தம்மா.. பாடலை அல்டிமேட் ஸ்டார் அஜீத்துக்காக பத்மஸ்ரீ கமல்ஹாசன் பாடியிருப்பார். அதை போலவே இந்த படத்தில் இடம் பெறப் போகும் பாடல் ஒன்றை முன்னணி ஹீரோ ஒருவர் பாட போகிறாராம்.

ஹரிபாஸ்கருக்கு எப்படி நடிப்பார்வம் வந்தது? அடிப்படையில் மல்டிமீடியா படித்தவர் ஹரி. கற்பனையை விரிய விடும் படிப்பு. அதோடு சேர்ந்து ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையும், கற்பனையும் இயற்கையிலேயே ஒட்டிக் கொள்ள சரியான நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். திரையுலக கோட்டையை திறக்க நினைக்கிற தம்பிகளுக்கு அண்ணன்களே சாவி தயாரிக்கிற பாக்கியம் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு இருந்திருக்கிறது. தனுஷ்-செல்வராகவன், ஜெயம் ரவி-ஜெயம் ராஜா, வரிசையில் இதோ... ஹரி-பார்த்தி!

முக்கியமான விஷயம்.. இசைஞானி குடும்பத்திலிருந்து வெவ்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் பலர் இருந்தாலும் முதன் முதலாக ஹீரோ அவதாரம் எடுப்பவர் ஹரிதான்!

கதாநாயகியை வெப்சைட்டுகளில் தேடி பிடிக்கும் காலமிது. அதிலும் திருப்திபடாமல் கேரளா, மும்பை என்று சுற்றிய டைரக்டர், பெங்களூரில் கண்டுபிடித்த பொக்கே தான் இந்த அம்ரிதா! இன்னிசை தென்றல் தேவாவிடம் ரிதம் புரோகிராமராக இருந்த ரிக்கி என்பவரின் மகள் தான் இவர். "வைகாசி பொறந்தாச்சு" காவேரியின் அண்ணன் மகளும் கூட! இவர் முன்பே கிடைத்திருந்தால் இரண்டு மாதங்களுக்கு முன்பே படப்பிடிப்பை துவங்கியிருப்பார்கள்.

பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்க போகிறது. முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார் ராதாரவி. இசையமைப்பாளர் சபேஷ் மகன் கார்த்திக், விஜய் டி.வி. லொள்ளு சபா ஜீவா இருவருமு ஹீரோவின் நண்பர்களாக நடித்து கிச்சு கிச்சு மூட்டவிருக்கிறார்கள்.

ஜுன் மாதம் படப்பிடிப்பு தொடங்கி, குற்றாலம், தென்காசி பகுதிகளில் நடைபெறுகிறது. இரண்டு பாடல்கள் வெளிநாட்டில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவு-சேகர்.வி.ஜோசப் இவர் சந்திரமுகி, சிவகாசி, பரமசிவம் போன்ற வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளர். இசை-ஸ்ரீகாந்த் தேவா, எடிட்டிங்-ஜி.சசிக்குமார், கலை-டி.சந்தானம், நடனம்-தினேஷ், கல்யாண், ஷோபி, சரவணராஜன், பாடல்கள்-பிறைசூடன், கபிலன், விஜயசாகர், பார்த்திபாஸ்கர்.

தயாரிப்பு-வி.தேவராஜுல
கதை-திரைக்கதை-வசனம்-டைரக்ஷன்-பார்த்தி பாஸ்கர்

Share this Story:

Follow Webdunia tamil