பாண்டியராஜனின் வாரிசு நடிக்கும் நாளைய பொழுதும் உன்னோடு!
பாண்டியராஜன் இரண்டாவது மகன் பிருத்வி கதாநாயகனாக நடிக்கும் படம் `நாளை பொழுதும் உன்னோடு'. இதில் `கருவாப்பையா... கருவாப்பையா...' என்று `தூத்துக்குடி' படத்தில் ஆட்டம் போட்ட கார்த்திகா கதாநாயகியாக நடிக்கிறார். பி.வாசுவிடம் உதவி இயக்குனராக இருந்த கே.மூர்த்தி கண்ணன் என்பவர் புதுமுக இயக்குனராக இப்படத்தில் அறிமுகமாகிறார். மாயவரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பி.ஆர்.சுரேஷ் குமார், பி.ஆர்.கே பிலிம்ஸ் பேனரில் முதன் முறையாக படத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார். சின்ன வயதிலிருந்து நட்பாக பழகும் இருவரை வயது வந்ததும் பிரித்து வைப்பதால் அது எப்படி காதலாக மாறுகிறது என்பதுதான் கதை.
இப்படத்தில் பாண்டியராஜனின் மூத்த மகன் பல்லவனும் மூன்றாவது மகன் பிரேமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மாயவரம் பகுதியை ஒட்டி நவக்கிரகங்கள் உள்ள ஊர்களில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள். அதன் தொடர்ச்சியாக தென்காசி, சென்னை மற்றும் மலேஷியாவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. பள்ளிப் பருவத்து காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் இதுவரை சொல்லாத மாதிரி புது கோணத்தில் சொல்லியிருக்கிறாராம் இயக்குனர். இதில் பிரித்வி, கார்த்திகா தவிர... லிவிங்ஸ்டன், வேணு அரவிந்த், கௌரி, கதா.க.திருமாவளவன், கோவை குணா, கீதா அப்புறம் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள இயக்குனர் டி.வி.சந்திரனும் நடிக்கிறார்கள்.இசை - ஸ்ரீகாந்த் தேவாஒளிப்பதிவு - தினேஷ்ராஜ்எடிட்டிங் - செல்வராஜ்கலை - கிருஷ்ணன்ஸ்டண்ட் - கில்லி சேகர்நடனம் - ஸ்ரீதர்ஸ்டில்ஸ் - அருண் கே.ஜெயன்டிஸைனர் - சரவணன்பாடல்கள் - கபிலன்,யுகபாரதி,கே.மூர்த்தி கண்ணன்தயாரிப்பு நிர்வாகம் - ராஜாதயாரிப்பு மேற்பார்வை - ஜி.மோகன்மக்கள் தொடர்பு - வீ.கே.சுந்தர்தயாரிப்பு - பி.எஸ்.சுரேஸ்குமார்