Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மறுபதிப்பாகும் நான் அவனில்லை!

Advertiesment
மறுபதிப்பாகும் நான் அவனில்லை!

Webdunia

பழைய படங்கள் பாடல்கள் எல்லாமே ரீ-மேக், ரீ-மிக்ஸஎன்ற பெயரில் மறுபடியும் வரத் தொடங்கியிருக்கிறது.

அந்த வரிசையில் கே.பாலசந்தரின் நான் அவனில்லை படத்தை மறுபடியும் எடுக்கப் போகிறார் இயக்குனர் செல்வா. ஒரு ஆசாமி பலவித தோற்றங்களில் போய் பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றுகிற கதை இது.

அந்தக் காலத்தில் ஜெமினிகணேசன் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய இந்த கேரக்டரில் "திருட்டுபயலே" ஜீவன் நடிக்க உள்ளார். முப்பத்தொரு வருடத்துக்கு முன்னால் வந்த படம் இப்போதைய காலமாற்றத்துக்கு ஏற்ப கலர் மாறப் போகிறது. ஸ்நேகா, நமிதா, மாளவிகா, ஜோதிர்மயி, கீர்த்திசாவ்லா ஆகிய 5 பேரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். முக்கியமான கேரக்டரில் சந்தானம் நடிக்கிறார்.

படப்பிடிப்பு சென்னை, நாகர்கோயில், கன்னியாகுமரி, திருச்சூர், திருவனந்தபுரம், சாலக்குடி, சிக்மகளூர், இடுக்கி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது.

பாடல் காட்சிகளை மாலத்தீவு, செஷல்ஸ், பிலிப்பைன்ஸ், சுமத்ரா தீவுகளில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். விஜய் ஆன்டனி இசையமைக்கிறார். யூ.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுத..திரைக்கதை அமைத்து இயக்குகிறார் செல்வா.

நேமிசந்த் ஜபாக் நிறுவனம் சார்பில் வி.ஹிதேஷ் ஜபாக் தயாரிக்கிறார். கஜினி, வல்லவன் படங்களின் விநியோகஸ்தரான இவர் தயாரிக்கும் முதல் படம் இது.

Share this Story:

Follow Webdunia tamil