Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏ.பி.பிலிம் கார்டன் தயாரிக்கும் ஓரம்போ ஆட்டோ வருது...

Advertiesment
ஏ.பி.பிலிம் கார்டன் தயாரிக்கும் ஓரம்போ ஆட்டோ வருது...

Webdunia

தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வாத்தியார் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து ஏ.பி.பிலிம் கார்டன் தயாரிக்கும் ஐந்தாவது படம் ஆட்டோ.

ஆட்டோ என்கிற பெயருடன் தொடங்கப்பட்ட படம்தான் இப்போது ஓரம்போ என அழகு தமிழில் பெயர் சூட்டப்பட்டு ஆக்ஷன் காமெடிப் படமாக உருவாகி இருக்கிறது.

இருட்டு சென்னைக்கு இன்னொரு முகம் உண்டு. வாகனப் போக்குவரத்து அடங்கி பின் நள்ளிரவு நேரத்தில் சாலையை அரைத்துச் செல்லும் ஆட்டோ அணிவகுப்பை யாராவது பார்த்ததுண்டா? அதற்குப் பின் இருக்கும் சுவாரஸ்யமான பெட் கட்டல்கள் யாருக்காவது தெரியுமா? சில வருடங்களுக்கு முன் பிரபல வார இதழ் அம்பலப்படுத்திய நள்ளிரவு ஆட்டோ ரேஸிங்-தான் ஓரம்போ படத்தின் பரபரப்பான கதைக்களம்.

கணவனும் மனைவியுமாக சேர்ந்து பணியாற்றிய படங்கள் உண்டு. ஒரு படத்தில் வெவ்வேறு துறையில் பணியாற்றி இருப்பார்கள். ஆனால் கணவனும் மனைவியும் சேர்ந்து உலகிலேயே முதன் முறையாக இயக்கிய முதல் படம் ஓரம்போ!

ஓரம்போ படத்தின் இயக்குநர்களாக புஷ்கர் & காயத்ரி அமெரிக்காவில் சினிமா தொழில் நுட்பம் படித்தவர்கள். ஹாலிவுட் டச்-சோடு இவர்கள் இயக்கும் முதல் படம் இது.

சினிமாத்தனம் இல்லாம இயல்பான யதார்த்தமான படம் என்றால் அதன் கதையோட்டத்தில் சோகம் மெலிதாக இழையோடிக் கொண்டிருக்கும். அந்த வரையறையை மீறிய படம் ஓரம்போ. ஆழமான கதையம்சம் கொண்ட அதே நேரத்தில் யதார்த்தமான கலர்புல் காமெடிப் படமாக உருவாகியுள்ளது ஓரம்போ.

சந்துரு என்கிற கதாபாத்திரத்தில் ஆர்யா அசத்தலாக நடித்திருக்கிறாராம். பகலில் ஆட்டோ ஓட்டும் அதே நேரத்தில் இரவில் ரிஸ்கான ஆட்டோ ரேஸ் ஓட்டும் கேரட்கர் ஆர்யாவிற்கு. ஒரு சவாலான கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார் ஆர்யா என்கிறார்கள் இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி.

படத்தின் ஹீரோ ஆர்யாவிற்கு டூப் கிடையாது. ரிஸ்கான காட்சிகளில் கூட டூப் போடாமல் நடித்திருக்கிறார். ஆனால் அவர் ஓட்டும் ஆட்டோவுக்கு டூப் உண்டு... ரேஸ் காட்சிகளில் சேதம் ஏற்படும் என்பதற்காக நான்கு ஆட்டோக்களை ஒரேமாதிரியாக உருவாக்கி படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

சிங்களத்து சிருங்காரம் பூஜா. அலங்காரம் அதிகம் தேவைப்படாத அழகு மயில். பிரியாணி கடை நடத்தும் பூஜா மணக்க மணக்க நடித்திருக்கிறாராம். இரவு நேரத்தில் ஒற்றை விளக்குடன் நான்கு சக்கர வண்டியில் சிக்கன் பிரியாணி விற்கும் சென்னைப் பெண் போலவே கலக்கியிருக்கிறாராம்.

எடிட்டர் ஆன்டனி பாடல் காட்சிகளில் தனக்கென்று தனி முத்திரையை பதித்து வருகிறார்கள். வாரத்திற்கு ஒருமுறை மேம்படுகின்ற அயல்நாட்டு தொழில்நுட்பத்தை தனது படங்களின் பாடல் காட்சிகளில் பயன்படுத்துபவர் ஆன்டனி. அவர் எடிட்டிங்கில் உருவான படங்களில் இடம் பெற்றிருக்கிற பாடல் காட்சிகள் அனைத்துமே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. ஓரம்போ படத்தைப் பொறுத்த வரை பாடல் காட்சிகளில் மட்டுமல்லாது பரபரப்பான ஆட்டோ சேஸிங் காட்சிகளிலும் தனது தனி முத்திரையைப் பதித்திருக்கிறார் ஆன்டனி என்கிறார்கள் இயக்குநர்கள் புஷ்கர் & காயத்திரி.

வழக்கமாக காதல் காட்சிகள் படமாக்குவதற்காக லொகேஷன் தேடி அலைவார்கள் வெளியூர், வெளிநாடு என்று செல்வார்கள். ஆனால் ஓரம்போ படத்தைப் பொறுத்தவரை படத்தில் இடம்பெரும் காதல் காட்சிகளை ஒரு சின்ன இடத்திலேயே வைத்து படமாக்கிவிட்டார்கள். அந்த இடத்திற்குப் பெயர் ஆட்டோ!

சென்னையில், திருவல்லிக்கேணிக்கென்று ஒரு பாரம்பரியம் உண்டு. அழகான பூகோள அமைப்பு. குறுகலான தெருக்கள், கடற்கரை சாலை, கோவில் குளம்... இந்தப் பகுதிகளிலேயே ஒரம்போ படத்தின் பெரும்பாலான பகுதிகளை படமாக்கி இருக்கிறார்கள்.

பரபரபhக பேசப்பட்டு வரும் ஒளிப்பதிவாளர்களில் நீரல் ஷா முக்கியமானவர். சமீபத்தில் இந்தியில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற தூம் 2 படத்தின் ஒளிப்பதிவாளர் இவரே. ஓரம்போ படத்தின் கதையில் தனக்கு ஏற்பட்ட ஈடுபாட்டிலிருந்து விலகாமல் இருப்பதற்காக தூம் 2 படத்திற்கு கொடுத்த தேதிகளை மாற்றினாராம்.

ஓரே ஷாட்-ல் ஒரு காட்சியை எடுத்திருக்கிறார்கள். ஒரு பாடலை? இதுவரை தமிழில் இப்படி ஒரு முயற்சியை யாரும் செய்ததில்லை. புஷ்கர் & காயத்திரி அந்த முயற்சியை செய்திருக்கிறார்கள். நான்கு நிமிடங்கள் ஓடக்கூடிய பாடலை ஒரே ஷாட்-ல் படமாக்கியிருக்கிறார்கள். இந்தப் பாடல்காட்சி படத்தில் முக்கியமான ஹைலைட்டாக இருக்குமாம்.

படத்தில் நடிப்பதற்கு நிறைய ஆட்டோ டிரைவர்கள் தேவைப்பட்டிருக்கிறது. ஆட்டோ டிரைவர்களுக்கென்று ஒரு தனி க்ஷடினலடயபேரயபந உண்டு. சினிமாத்தனமான ஆட்டோ டிரைவர்களிடம் இந்த க்ஷடினலடயபேரயபந கிடையாது என்பதால் நிஜமான ஆட்டோ டிரைவர்களையே படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.

சண்டக்கோழி படத்தில் வில்லனாக நடித்தவர் லால். ஓரம்போ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.

ஒரு படத்தில் ஒரு சில காட்சிகளையாவது செட் போட்டு படமாக்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகிவிடும். இயக்குநர் கற்பனை செய்து வைத்திருந்த லொகேஷன் கிடைக்காது. ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரை தாங்கள் கற்பனை செய்து வைத்திருந்த லொகேஷன்களைத் தேடி தேடி கண்டுபிடித்து அங்கே படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள் இந்த இயக்குநர் தம்பதியினர்.

அதைப்போலவே கதையின் இயல்பு கெட்டு விடும் என்பதற்காக ஆர்டிஸ்ட்களுக்கு மேக்கப் போடுவதை தவிர்த்திருக்கிறார்கள். கதையோட்டத்திற்கு தேவையான Lighting- ல் ஆர்டிஸ்டுகளை ஜொலிக்க வைத்திருக்கிறாராம் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா.


படத்தின் கேரக்டர்களுக்கு வைக்கப்படும் பெயர் பேசப்படுவதுண்டு. ஓரம்போ படத்தில் ஆர்டிஸ்ட்களுக்கு வித்தியாசமான பெயர்களை வைத்திருக்கிறார்கள். பிகிலு, சன் ஆப் கன், கத்திரி, மாப்ள, சப்ளையர் இவையெல்லாம் ஓரம்போ படத்தின் கேரக்டர் பெயர்கள்.

ஆட்டோதான் கதைத்தளம், விதம்விதமாக, வித்யாசமாக ஆட்டோக்களை களத்தில் இறக்கினால்தானே காட்சிகள் சிறப்பாக அமையும். சிறுவர் சிறுமிகளை கவரும் விதத்தில் ஆட்டோக்களுக்கு மேக்கப் போட்டு பறக்க விட்டிருக்கிறார்கள். சீட்டா, லஷ்மி என்றெல்லாம் ஆட்டோக்களுக்கு வித்யாசமான பெயர்களும் உண்டு.

இந்தியில் முன்னணி பாடகி அல்காயாக்னிக். ஒரு பாடலை அவர் பாடினால்தான் சிறப்பாக இருக்கும் என்று நினைத்த இயக்குநர்கள் மிகவும் பிசியான அவரை முதன்முறையாக தமிழில் பாட வைத்திருக்கிறார்கள்.

விஜய டி.ராஜேந்தர் இளமை துள்ளும் ஒரு பாடலை ஓரம்போ படத்திற்காக பாடியிருக்கிறார். கண் கணபதி என்கிற அந்தப் பாடல் இந்த வருடத்தின் இளைஞர்களின் எழுச்சிப் பாடலாக இருக்குமாம்.

ஓரம்போ படத்தில் காமெடிக்கென்று தனி டிராக் கிடையாது. ஆனால் படம் முழுக்க ஒவ்வொரு காட்சியிலும் காமெடி இருந்து கொண்டே இருக்குமாம்.

தேசிய நெடுஞ்சாலையில் படப்பிடிப்பு நடத்துவது மிகவும் சிரமம். பறந்து செல்லும் வாகனங்களுக்கு நடுவே படப்பிடிப்பை நடத்த வேண்டும். படத்தில் மூன்று பரபரப்பான சேஸிங் காட்சிகள், இயல்பான வாகன போக்குவரத்தோடு சேஸிங் காட்சியை திடுக்கிடும் வகையில் படமாக்கியிருக்கிறாராம் ஸ்டண்ட் மாஸ்டர் தியாகராஜன்.

வெயில் படத்திற்காக கிராமிய வாசனையை தனது இசையில் கொண்டு வந்த ழு.ஏ. பிரகாஷ், ஓரம்போ படத்தில் முற்றிலும் வித்தியாசமான டியூன்களை அமைத்திருக்கிறார். 2007ல் தாளம் போட வைக்கும் பாடல்களாக ஓரம்போ படத்தின் பாடல்கள் நிச்சயம் அமையும் என்கிறார்கள் படத்தின் தயாரிப்பாளர்களான ஏ. பழனிவேல் மற்றும் ஹ.ஊ. ஆனந்தன்.

பிரபல டான்ஸ் மாஸ்டர் கல்யாண், ஓரம்போ படத்திற்காக கண் கணபதி என்கிற பாடலுக்கு ஆடி அசத்தியிருக்கிறார்.

ஆட்டோவைப் பற்றி ஒரு சயயீ ளடிபே படத்தில் இடம்பெற்றுள்ளது.

ளுரளேடைம, ஆயயணய போன்ற விளம்பரப் படங்களில் தோன்றிய தான்யா என்கிற மும்பை அழகி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்.

நந்தவனத்தில் ஒரு ஆண்டி, நாமறிந்த நாட்டுப் புற பாடல் இது. இந்தப் பாடலை சுடிஉம ஸ்டைலில் பாடினால் எப்படி இருக்கும்! மாணிக்கவிநாயகம் குரலில் பட்டையை கிளப்புமாம் இந்தப் பாடல்.

படத்தின் கலை இயக்குநர் மிலன், சிந்தாதரிப் பேட்டையில் பிறந்து வளர்ந்தவர். படத்தின் லொகேஷன்களை இயல்பான வகையில் மெருகேற்றி இருக்கிறாராம்.

படத்தின் நடிகர் நடிகைகள

ஆர்யா (சந்துரு), பூஜா (ராணி), லால் (பிகிலு), ஜான் விஜய் (சன் ஆப் கன்), அஸ்வினி (செண்பகம்), ஜெகன் (சப்ளையர்), நெல்லை சிவா, தம்பி ராமைய்யா மற்றும் பலர்.

படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள

ஒளிப்பதிவு : நீரவ் ஷ
இசை : ழு.ஏ. பிரகாஷ் குமார
எடிட்டிங் : ஆண்டனி
கலை : மிலன
சண்டைப் பயிற்சி : தியாகராஜன
பாடல்கள்: நா. முத்துக்குமார், தியாகராஜ குமாரராஜ
நடனம்: கல்யாண
வசனம்: தியாகராஜ குமாரராஜ
மக்கள் தொடர்பு : மௌனம் ரவி
ஸ்டில்ஸ் : சிற்றரச
தயாரிப்பு மேற்பார்வை: ராஜா ஸ்ரீதர
தயாரிப்பு நிர்வாகம்: கதிரை ரவி

தயாரிப்பு : ஏ. பழனிவேலு, ஹ.ஊ. ஆனந்தன

கதை திரைக்கதை இயக்கம்: புஷ்கர் & காயத்ரி

பாடல்கள் எழுதியவர் பாடியவர்கள

1. Triplicane Auto தியாகராஜ குமாரராஜா ப்ளாச
2. இது என்ன மாயம் நா. முத்துக்குமார் சங்கர் மகாதேவன் & அல்கா யாக்னிக
3. கோழி காலு நா. முத்துக்குமார் கைலாஷ்கேர், ஜாஸிகிப்ட
4. ஜிகு ஜிக்கான் நா. முத்துக்குமார் மாணிக்கவிநாயகம
5. யார் இரவினை நா. முத்துக்குமார் சுனிதா சாரதி
6. கண் கணபதி நா. முத்துக்குமார் விஜய டி ராஜேந்தர


Share this Story:

Follow Webdunia tamil