Entertainment Film Preview 0705 22 1070522118_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"கல்லூரி காதல்" இது வித்தியாசமானது

Advertiesment

Webdunia

கல்லூரியை மையமாக வைத்து தமிழில் நிறைய படங்கள் வந்துவிட்டன. அந்த வரிசையில் "கல்லூரி காதல்" என்ற படமும் வந்திருக்கிறது. ஆனால் இது மற்ற படங்களை விட மிகவும் வித்தியாசமானது என்கின்றனர் படக்குழுவினர்.

படத்தின் பெயரில் தான் காதல் இருக்கிறதே தவிர இதன் கதை முழுக்க முழுக்க வித்தியாசமானது. காவல் துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்படும் போராட்டத்தை வைத்து கதை பின்னப்பட்டிருக்கிறது. அன்பு, காதல் கிசு கிசு , கலிங்கா ஆகிய படங்களில் நடித்த பாலா, இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பிரபல நடிகை ஜெயபாரதியின் தங்கை மகனான முன்னா படத்தின் இன்னொரு கதாநாயகனாக நடிக்கிறார். காமெடி வேடத்தில் கருணாஸஎம்.எஸ்.பாஸ்கர், காதல் சுகுமார், பாலேந்திரன், சிங்கமுத்து ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் லிவிங்ஸ்டன் முக்கியமான
கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஜீவன் தாமஸ். இவர் ஏ.ஆர்.ரகுமானிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். தருண் ஒளிப்பதிவு செய்கிறார். தேவ சேனாதிபதி என்பவர் வசனம் எழுதுகிறார். படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் மனோரஞ்சன். இவர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். எஸ். ஆர்.பிலிம்ஸசார்பில் படத்தை தயாரிப்பது எஸ்.ராதா. வருகிற 23ம் தேதி கோவையில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய இடங்களிலும் நடக்க இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil