அஜீத் அப்ஸலியூட் ஜென்டில்மேன் - தமன்னா
, புதன், 8 ஜனவரி 2014 (15:51 IST)
புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து புத்துணர்ச்சியோடு இருக்கிறார் தமன்னா. வருட தொடக்கத்தில் வீரம் வெளியாகும் மகிழ்ச்சி வெளிப்படையாக தெரிகிறது. அந்த சந்தோஷத்துடன் பல்வேறு மீடியாக்களுக்கு பேட்டியளித்து வருகிறார். 2014 சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை அந்த பேட்டிகளினூடே பளிச்சிடுகிறது.
எப்படி புத்தாண்டு கொண்டாட உங்களுக்கு விருப்பம்?எனக்கு ஒவ்வொரு புத்தாண்டும் யுனிக் ஆக இருக்க வேண்டும். அதனால் ஒரே இடத்தில் புத்தாண்டு கொண்டாடுவதில்லை. ஒவ்வொரு முறையும் ஒரு இடம். குடும்பத்தோடுதான் எப்போதும் புத்தாண்டு கொண்டாட பிடிக்கும்.இந்த புத்தாண்டில் உங்கள் விருப்பம் என்ன?ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமாக இல்லை என்றால் உங்களால் வாழ்க்கையில் எதையும் என்ஜாய் செய்ய முடியாமல் போய்விடும்.வீரம் படத்தில் நடித்தது?
நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன். வீரத்தில் என்னுடைய கேரக்டர் எனக்குப் பிடித்திருந்தது. சின்ன நகரத்தில் தமிழ் கலாச்சாரத்தில் வாழும் பெண். தமிழ் ரசிகர்களை எளிதாக கவரக் கூடிய கதாபாத்திரம். படம் நன்றாக வந்திருக்கிறது.