வீரம் பேமிலி என்டர்டெய்னர் - இயக்குனர் சிவா பேட்டி
, வெள்ளி, 3 ஜனவரி 2014 (15:36 IST)
வீரம் ஜனவரி 10 வெளியாகிறது. ரிலீஸை முன்னிட்டு முதல்முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்தது வீரம் டீம். எல்லோரும் சொல்லி வைத்த மாதிரி பேசிய ஒரு விஷயம், இதுவொரு பேமிலி என்டர்டெயின்மெண்ட். படத்தின் இயக்குனர் சிவாவின் பேச்சில் படம் ப்ளாக் பஸ்டராகும் என்ற நம்பிக்கை பளிச்சிட்டது. படம் எப்படி வந்திருக்கு?
வீரம் படம் ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸாகிறது. ரொம்ப நல்லா வந்திருக்கு. ஹோல்சம் பேமிலி என்டர்டெய்னர். ஆக்சன், காமெடி எல்லாம் கலந்து நல்லதொரு படமா வந்திருக்கு. விஜயா புரொடக்சன்ஸ் அப்படிங்கிற மிகப்பெரிய பேனர்ல அஜித் சார்ங்கிற பெரிய ஸ்டாரோடு நல்ல ஒரு டீமோட ரொம்ப சின்சியரா உழைச்சி எடுத்திருக்கோம். எல்லோரையும் இந்தப் படம் சந்தோஷப்படுத்தும்னு ரொம்ப கான்பிடென்டா நம்பறேன்.பிரஸ்மீட்டுக்கு அஜித் வரமாட்டார். மற்ற நடிகர்களும் ஏன் ஆப்சென்ட்..?ஆக்சுவலா முதல்ல டெக்னீஷியன்ஸை வச்சு ஒரு மீட் பண்ணலாம்னுதான் நாங்க மட்டும் வந்திருக்கோம். அடுத்து ஆர்ட்டிஸ்டை வச்சு ஒரு மீட் பண்ண ப்ளான் பண்ணியிருக்கோம்.படத்தின் இசை எப்படி வந்திருக்கு?
தேவி ஸ்ரீ பிரசாத்கூட நான் இரண்டு தெலுங்குப் படம் பண்ணியிருக்க வேண்டியது, எப்படியோ மிஸ்ஸாயிடுச்சி. இப்படியொரு பெரிய படத்துலதான் நாங்க ஒண்ணா வொர்க் பண்ணணும்னு இருந்திருக்கு. ரொம்ப நல்லா பண்ணியிருக்கார். இந்த கதைக்கு, வீரம்ங்கிற இந்த டைட்டிலுக்கு, அஜித் சாருக்கு செட்டாகிற பிரமாதமான தீம் மியூஸிக் போட்டு கொடுத்திருக்கார். அந்த தீம் மியூஸிக்கை கம்போஸ் பண்ணி அதுக்கு லிரிக் எழுதும் போதே இதுவொரு ப்ளாக் பஸ்டராக இருக்கும்னு தோன்றியது. இப்போ அந்த தீம் மியூஸிக்கை படத்துல செட் பண்ணி படமா பார்க்கிற போது இட்ஸ் லுக் வொண்டர்ஃபுல். படத்தை இது அடுத்த லெவலுக்கு கொண்டு போயிருக்கு.