Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரசிகர்களை வெறுப்பேற்றக் கூடாது – நடிகர் ஆர்.கே.

Advertiesment
ரசிகர்களை வெறுப்பேற்றக் கூடாது – நடிகர் ஆர்.கே.
webdunia photoWD
முதல் படம் வாழ்த்துகளில் சின்ன வேடம். அடுத்து தூண்டிலில் வில்லன். எல்லாம் அவன் செயலில் நாயகன். தமிழ் சினிமா படிக்கட்டில் தடதடவென முன்னேறி வருகிறவர், ஆர்.கே. காரைக்குடியிலிருந்து மார்க்கெட்டிங் செய்ய வந்த பிசினஸ் மேக்னெட் இப்போது பிஸி நடிகர். அவரது அதிரடி பேட்டியிலிருந்து...

நீங்கள் நாயகனாக நடித்த முதல் படம் எல்லாம் அவன் செயல். ஏதிர்மறை நாயகனைப் போன்றதுதான் இதில் உங்களது கதாபாத்திரம். ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தில் இப்படியொரு வேடத்தை தேர்ந்தெடுக்க என்ன காரணம்?

இங்குதான் கதாநாயகன், வில்லன் என்ற பாகுபாடெல்லாம். ஹாலிவுட்டில் இந்த பாகுபாடெல்லாம் கிடையாது. நல்ல வேடம் என்றால் தயங்காமல் நடிப்பார்கள். அங்கு கதைக்குதான் முக்கியத்துவம். அந்த கலாச்சாரம் இப்போது தமிழ் சினிமாவிலும் நுழைந்துள்ளது ஆரோக்கியமான மாறுதல். இந்த வேடத்தில்தான் நடிப்பேன், அந்த வேடத்தில் நடிக்க மாட்டேன் என்ற பாகுபாடெல்லாம் என்னிடம் கிடையாது. எந்த வேடத்தில் நடித்தாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய கொள்கை.

ஆக, வெரைட்டியான கதாபாத்திரம்தான் உங்கள் சாய்ஸ் இல்லையா?

ஆமாம். தூண்டிலில் வில்லனாக நடித்த நான், எல்லாம் அவன் செயலில் போராளியாக நடித்தேன். அடுத்தப் படத்தில் வெள்ளந்தியான கிராமத்து வேஷம்.

அது என்ன படம்?

படத்தின் பெயர் அழகர்மலை. காதலுக்கு ம‌ரியாதைக்குப் பிறகு சங்கிலி முருகன் தயா‌ரிக்கும் படம். இளையராஜஇசையமைக்கிறார்.

புதுமுகங்களை ரசிகர்கள் அத்தனை எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?

இந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்தவர்கள் அனைவரும் புதுமுகங்கள்தானே? ரசிகர்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லையா? புதுமுகங்கள் நடித்தாலும் வித்தியாசமான கதை இருந்தால் படம் வெற்றி பெறும்.

நாயகனாக நடித்த முதல் படத்தில் டூயட் இல்லாதது ஏமாற்றம் அளித்ததா?

அதில் எந்த வருத்தமும் இல்லை. நான் முன்பே சொன்னதுபோல் கதைக்கேற்ற கதாபாத்திரத்தில்தான் எனக்கு நடிக்க ஆசை. எல்லாம் அவன் செயலில் டூயட்டுக்கான அவசியம் இல்லை. கதை அமையும்போது டூயட் தானாகவே அமையும்.

எந்த மாதி‌ரி வேடங்களில் நடிக்க ஆசை?

இரண்டரை மணி நேரத்தை பணயம் வைத்து தியேட்டருக்கு வரும் ரசிகனை வெறுப்பேற்றக் கூடாது. அந்த மாதி‌ி வேடங்களில் மட்டுமே நடிக்க ஆசை.

Share this Story:

Follow Webdunia tamil