கான்ட்ரவர்ஸியில் ஆரம்பித்த லேகா வாஷிங்டனின் கேரியரில் இப்போது பௌர்ணமி பிரகாசம். ஜெயம் கொண்டான் படத்தில் இவரது நடிப்பை பாராட்டாதவர்கள் யாரும் இல்லை.
ஜெய்யுடன் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளவர், விரைவில் இந்திப் படத்தில் நடிக்க உள்ளார். அவரது பேச்சில் எதிரொலிக்கிறது இந்த சந்தோஷம்.
ஜெயம் கொண்டானைப் போல் இரண்டாவது நாயகியாக நடிப்பீர்களா?
ஜெயம் கொண்டானில் இரண்டாவது கதாநாயகி என்றாலும் நாயகியைவிட எனக்கே முக்கியத்துவம் அதிகமிருந்தது. நடிக்கவும் வாய்ப்புள்ள கேரக்டர். இப்போது படத்தில் என்னுடைய நடிப்பை அனைவரும் பாராட்டுகிறார்கள். மணிரத்னமும் என்னுடைய நடிப்பை பாராட்டியது மறக்க முடியாது. ஆனால் இனி இரண்டாவது நாயகியாக நடிக்க மாட்டேன்.
அடுத்து எந்தப் படத்தில் நடிக்கிறீர்கள்?
ஜெய் ஜோடியாக ராக்கோழி படத்தில் நடிக்கயிருக்கிறேன். புஷ்கர் காயத்ரி படத்தை இயக்குகிறார்கள்.
இந்தியில் நடிக்கயிருப்பது உண்மையா?
உண்மைதான். ராக்கோழி படம் துவங்க இன்னும் பல மாதங்களாகும். அதனால் அதற்கு முன்னால் ஒரு இந்திப் படத்தில் நடிக்கயிருக்கிறேன்.
எந்த மாதிரி படத்தில் நடிக்க ஆசை?
ஓய்வு நேரத்தில் அட்வென்ஜர் விளையாட்டுகளில் ஈடுபடுவது என்னுடைய பொழுதுபோக்கு. இப்போதுகூட லண்டனில் ஹெலிகாப்டரிலிருந்து பாரசூட் மூலம் குதிக்கும் பயிற்சி எடுத்தேன். அதேமாதிரி ஆக்சன் நிறைந்த படத்தில் நடிக்க விருப்பம் உள்ளது.
கிளாமர், ஹோம்லி இதில் எது உங்கள் சாய்ஸ்?
அந்த மாதிரி எந்த வட்டத்திலும் சிக்க விரும்பவில்லை. நல்ல கதை, திறமையான டீம், சவாலான கேரக்டர் இதைப் பார்த்துதான் படங்களை ஒத்துக் கொள்வதாக இருக்கிறேன்.
கிளாமர் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
கிளாமருக்கு எந்த அளவுகோலும் வைத்துக் கொள்ளவில்லை.