மீனாட்சி...! கொல்கத்தா ரசகுல்லா. கருப்பசாமி குத்தகைதாரர் சினிமா முகவரி. கால்ஷீட் டயரி ஹவுஸ்ஃபுல்லாகும் அளவுக்கு வாய்ப்புகள். மகிழ்ச்சியின் உச்சியிலிருப்பவரின் அச்சமில்லா பேட்டியிலிருந்து...
கருப்பசாமி குத்தகைதாரருக்குப் பிறகு ஏன் இடைவெளி?
நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிப்பதில்தான் எனக்கு விருப்பம். ராஜாதி ராஜா, பள்ளிகொண்டபுரம், தநா-07 அல 4777 படங்களில் எனக்கு நல்ல வேடம்.
எந்த மாதிரி என்று சொல்ல முடியுமா?
இந்த மூன்று படங்களிலும் கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன்.
கிளாமராக நடிப்பீர்களா?
எனக்கு கிளாமர் காட்டுவதில் எதிர்ப்பு கிடையாது. அதற்கு நான் பொருத்தமாக இருக்க வேண்டும். எனக்கு நீச்சல் உடை பொருத்தமாக இருக்காது. அதனால் அப்படி நான் நடிக்க மாட்டேன்.
முத்தக் காட்சி....?
என்னுடைய கண்களும், உதடுகளும் அழகாக இருப்பதாக பல ஆண்கள் கூறியிருக்கிறார்கள். உதடுகள் அழகாக இருந்தால் உடனே முத்தக் காட்சி வைத்துவிடுவார்கள். எனக்கு இதுவரை அப்படியொரு வாய்ப்பு வரவில்லை.
வாய்ப்பு வந்தால்...?
தாராளமாக நடிப்பேன். கமல்ஹாசனுடன் முத்தக் காட்சியில் நடிக்க வாய்ப்பு வந்தால் உடனே ஒத்துக்கொள்வேன்.
யாரையாவது காதலிக்கிறீர்களா?
இதுவரை யார் மீதும் காதல் வரவில்லை. இப்போது என்னுடன் நடிக்கும் ஹீரோக்கள் அனைவரும் திருமணமானவர்கள். அதனால் பிரச்சனை எதுவுமில்லை. ஒருவகையில் இது பாதுகாப்பாகவே இருக்கிறது.
மீனாட்சி என்பது உங்கள் நிஜப்பெயரா?
என்னுடைய சொந்த ஊர் கொல்கத்தா. சினிமாவுக்காக பிங்கி சர்க்கார் என்ற எனது பெயரை மீனாட்சியாக மாற்றினார்கள்.
உங்கள் எதிர்காலத் திட்டம்?
இப்போது எனக்கு வயது 21. 30 வயது வரை நடிப்பேன். பிறகு திருமணம். ஒரேயொரு ஆண் குழந்தை மட்டும் பெற்றுக்கொள்வேன்.