கிங் படத்தின் மூலம் இயக்குனரானவர் பிரபு சாலமன். கொக்கி, லீ படங்களில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் அடுத்ததாக இயக்கிக் கொண்டிருப்பது லாடம் படத்தை. அவரது பேட்டியிலிருந்து... அது என்ன லாடம்...?யாராவது மாட்டிக்கிட்டா, லாடம் கட்டிட்டாங்கன்னு சொல்வோம் இல்லையா. என்னோட பட நாயகனும் அப்படி மாட்டிக்கிறான். அந்த சிக்கலிலிருந்து ஒவ்வொரு ஆணியா பிடுங்கி எப்படி தப்பிக்கிறான்ங்கிறதை விறுவிறுப்பா எடுத்திருக்கோம். புதுமுகத்தை ஹீரோவா போட்டிருக்கீங்க...? இந்தக் கதைக்கு புதுமுகம்தான் சரி. தெரிஞ்ச ஹீரோன்னா இப்படித்தான் பண்ணுவாங்கன்னு ரசிகர்களுக்குத் தெரியும். அதேநேரம் புதுமுகம்னா, அவரை வச்சு என்ன சொல்ல வர்றார்னு ஒரு எதிர்பார்பபு இருக்கும். என்னோட கதாநாயகன் மதுரையிலயிருந்து சென்னை வர்ற சாஃப்ட்வேர் இன்ஜினியர் குஞ்சிதபாதம். இதுக்கு அப்பாவியான ஒரு முகம் தேவை. அரவிந்தன் (இவர்தான் ஹீரோ) அதுக்கு சரியா இருந்தார்.
எப்படி கதைகளை தேர்வு செய்யறீங்க? என்னோட ஒவ்வொரு படங்களுமே நிஜக் கதைகள்தான். கிங் முடிச்சப்புறம் ஒரு தயாரிப்பாளர்கிட்ட கதை சொல்லப் போனேன். கதையெல்லாம் இருக்கட்டும் தம்பி, உங்க ஜாதகத்தை கொடுங்க, நமக்கு சரிவருமா பார்ப்போம்னு சொன்னார். என்னோட கதைகள்தான் என்னோட ஜாதகம்னு சொல்லிவிட்டு வந்திட்டேன். அதைவச்சுதான் கொக்கி படத்தை எடுத்தேன். ·புட்பால்ல பெரிய ஆளா வரணும்னு நினைச்ச என்னோட நண்பனோட கதைதான் லீ. தெலுங்கில் லாடம் படத்துக்கு '16 டேய்ஸ்'னு பெயர் வச்சிருக்கிறீங்களே? வாயை கொடுத்து வம்பில் மாட்டியவனோட கதைதான் லாடம். வாயிலிருந்து வர்ற வார்த்தையை கட்டுப்படுத்தவும் முடியாது. அதனால ஏற்படுற விளைவுகளிலிருந்து தப்பிக்கவும் முடியாது. படத்தோட ஹீரோ பேசுற ஒரு வார்த்தை அவனை ஒரு சிக்கல்ல மாட்டி விடுது. அவனுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு விஷயத்தை செய்யச் சொல்லி 16 நாள் கெடு கொடுக்கிறாங்க. ஹீரோகிட்ட இருக்கிறது மூளை பலம் மட்டும்தான். அதை வச்சு எப்படி சாதிக்கிறான்ங்கிறது கதை. 16 நாட்களில் நடக்கிற நிகழ்வுகளின் தொகுப்புதான் படம்ங்கிறதால 16 டேய்ஸ்னு பெயர் வைத்தோம். சார்மியை ஹீரோயினா தேர்ந்தெடுக்க ஏதாவது காரணம்...?
தெலுங்குலயும் படம் வெளியாகறதால அங்க ஃபேமஸா இருக்கிற சார்மியை செலக்ட் பண்ணினோம். ஏஞ்சல்ங்கிற சேல்ஸ் கேர்ள் வேடம். காமெடி கலந்த இந்த வேடத்தில் அவங்களைத் தவிர வேற யாரும் நடிச்சிருக்க முடியாது என்று படம் பார்த்தால் நீங்களே சொல்வீங்க.
கொக்கி, லீ போல இதிலும் டெக்னிகல் மிரட்டல்கள் இருக்கிறதா?
த்ரீ பெர்ஃப்ரேஷன்ங்கிற கேமராவை முதல் முறையா தமிழ்ல பயன்படுத்தியிருக்கோம். அதேமாதிரி நாங்க பயன்படுத்தியிருக்கிற எஸ்4ஐ, ப்ரோப் லென்ஸ்களும் தமிழுக்கு புதுசுதான்!